Published:Updated:

கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகராக கலாபவன்மணி இருந்தார். அவர், 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதப்பட்டது. இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

அவருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 45 கிராம் மெத்தனால் கலந்து இருந்தது தெரியவந்தது. மேலும், காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கலாபவன் மணியின் நண்பர்கள் மற்றும் மேனேஜரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் இதுவரை ஏதும் கண்டறிய முடியாத நிலை நீடித்துவருகிறது.

கலாபவன் மணி மர்ம மரணம் தொடர்பாக, அவருடைய சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தார். அதில், சிபிஐ விசாரணை வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இதனிடையே, கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அவருடைய சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 'கலாபவன் மணி மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஒரு மாதத்துக்குள் விசாரணையைத் தொடங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.