Published:Updated:

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி!

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி!
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி!

வரும் 21 ஆம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. 

 2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாவின் சிறப்புகளையும் நன்மைகளையும் எடுத்துரைக்கும் நோக்கில், சர்வதேச யோகா தினம் பின்பற்றப்படுகிறது.  இந்தியா மற்றும் உலகின் பல இடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இணைந்து நடத்தும் யோகா விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதியிலிருந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் யோகா வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டுவருகின்றன. நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கீதா மிட்டால் தொடங்கிவைத்த இந்த வகுப்புகளில், நீதிமன்றத்தின் பணியாளர்களைப் பங்கேற்கச் சொல்லி ஊக்கம் அளிக்கப்படுகிறதாம். 

நீதிமன்ற வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்படி, இந்த வகுப்புகள் நடத்தப்படுவது தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலால்தானாம். நீதிமன்றத்தில் பணிபுரியும் நபர்களுக்கு உள்ள மன அழுத்தங்களைக் குறைக்க யோகா உதவியாக இருக்குமென்று தலைமை நீதிபதி கருதுவதால், அவரின் முயற்சியில் இந்த வகுப்புகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. வரும் 21 ஆம் தேதி வரை இந்த வகுப்புகள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கோர்ட் வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.