Published:Updated:

வரதட்சணைப் புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

வரதட்சணைப் புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வரதட்சணைப் புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

ரதட்சணை தொடர்பான புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகளை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுக்க வரதட்சணை தொடர்பான புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகளை உருவாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், உதய் உமேஷ் லலித் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டம் 498 ஏ பிரிவை சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அது தொடர்பான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்கள் வந்தால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகளை அமைத்து, அந்த அமைப்பில் வரதட்சணை பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் புகார் அளிக்கலாம். அந்த அமைப்பு புகார் கொடுத்தவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். 

இந்தத் தீர்ப்புக்கு சாதக, பாதக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு வரதட்சணை கொடுமையை செய்வோர், தங்களைப் பாதுகாக்கும் வகையிலான தீர்ப்பாகக் கருதிவிடக்கூடாது எனவும் ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டத்தை, சில பெண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.