Published:Updated:

சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருள் சப்ளை? - நடிகை ரியா சக்ரபோர்த்திமீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ரியா சக்ரபோர்த்தி

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருளை சப்ளை செய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருள் சப்ளை? - நடிகை ரியா சக்ரபோர்த்திமீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருளை சப்ளை செய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ரியா சக்ரபோர்த்தி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் 14-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை மும்பை போலீஸார் விசாரித்துவந்தனர். சுஷாந்த் சிங் தந்தை கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்துவந்தது. போதைப்பொருள் பழக்கத்தால்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு வெளியானது. இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி வீடு உட்பட சில இடங்களில் ரெய்டு நடத்தியதோடு, ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக்கை கைதுசெய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தி, நடிகை ரியா சக்ரபோர்த்தி உட்பட மொத்தம் 15 பேர் போதைப்பொருள் கொள்முதல், சப்ளை போன்ற காரணங்களுக்காக 2020-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டனர். மும்பை முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டில் மொத்தம் 35 பேர்மீது போதைப்பொருள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்துவந்தனர். இது தவிர அமலாக்கப் பிரிவும் தனியாக விசாரித்துவந்தது. ரியா சக்ரபோர்த்தி 28 நாள்களுக்குப் பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரியா சக்ரபோர்த்தி உட்பட 35 பேர்மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் வரைவு குற்றப்பத்திரிகை நகலைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் குறித்து தற்போது தெரியவந்திருக்கிறது. அதில், ``குற்றவாளிகள் அனைவரும் 2020-ம் ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை ஒருவருக்கொருவர் இணைந்தோ அல்லது குழுவாகவோ சேர்ந்து போதைப்பொருளை வாங்கி அதை பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு விற்பனை செய்துவந்திருக்கின்றனர். அதோடு இது தொடர்பான சதிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். உரிய அனுமதி இல்லாமல் கஞ்சா, சரஸ், கோகைன் போன்ற போதைப்பொருளைக் கடத்திவர நிதியுதவி செய்ததோடு, அவற்றைத் தாங்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே குற்றவாளிகள்மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி

இதில் நடிகை ரியா சக்ரபோர்த்தி குற்றவாளிகள் சாமுவேல் மிரண்டா, சோவிக், திபேஷ் சாவந்த் உட்பட பலரிடமிருந்து, பலமுறை கஞ்சாவை விலைக்கு வாங்கியிருக்கிறார். அவற்றைத் தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங்கிடம் ரியா சக்ரபோர்த்தி கொடுத்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கான பணத்தை தன் சகோதரர் சோவிக் மூலம் கொடுத்திருக்கிறார். சோவிக் அடிக்கடி போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர் மற்ற குற்றவாளிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்கி வந்து அவற்றை சுஷாந்த் சிங்கிடம் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விரைவில் ரியா சக்ரபோர்த்தி உட்பட அனைத்துக் குற்றவாளிகள்மீதும் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்படும். அதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுமீது நீதிமன்றம் இன்று முடிவு செய்யவிருக்கிறது.