Published:Updated:

ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு... நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் - வழக்கில் நடந்தது என்ன?!

கோர்ட்டில் ஜாக்குலின்

இலங்கையைப் பூர்வீகமாககொண்ட ஜாக்குலின் நடிப்புக்காக இந்தியாவில் தங்கியிருக்கிறார். சுகேஷுடனான புகார் வெளிச்சத்துக்கு வந்த பிறகு பாலிவுட்டில் முக்கியப் பிரபலங்கள் ஜாக்குலினைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனராம்.

டெல்லி நீதிமன்றத்தில் நடந்த ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று பிற்பகலில் ஆஜரானார். தொழிலதிபர் மனைவியை மிரட்டி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச்சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் ஜாக்குலின் வெளிநாடு செல்ல முடியாமல் அமலாக்கப் பிரிவு தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். ஜாக்குலின் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அவருக்கு ஏற்கெனவே இடைக்கால ஜாமீன் கொடுத்திருந்தது. அதேசமயம் அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்துவந்தது.

ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு... நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன் - வழக்கில் நடந்தது என்ன?!

குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் விசாரணையின்போது கேள்வி எழுப்பியிருந்தது.

நேற்று பிற்பகலில் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இதனால் ஜாக்குலின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அவருக்கு நீதிமன்றம் நிரந்தர ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.2 லட்சம் உத்தரவாதத் தொகையை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜாமீன் மனு மீதான விசாரணைக்குப் பிறகு ஜாக்குலின் கோர்ட்டிலிருந்து வெளியில் வந்தார். உடனே ரசிகர்கள் ஜாக்குலினைச் சூழ்ந்துகொண்டனர். ஜாக்குலினின் வழக்கறிஞர்களும் போலீஸாரும் ஜாக்குலினை மீட்டுக் கொண்டுவந்தனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவம் வருத்தம் அளிப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், இது போன்று நடந்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஜாக்குலின் நடிப்புக்காக இந்தியாவில் தங்கியிருக்கிறார். சுகேஷுடனான புகார் வெளிச்சத்துக்கு வந்த பிறகு பாலிவுட்டில் முக்கியப் பிரபலங்கள் ஜாக்குலினைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனராம்.