Published:Updated:

`1978-ல் 20 ரூபாய் திருடியதாக புகார்' - 41 ஆண்டுகால வழக்கு விசாரணைக்குப் பின் விடுதலை!

41 ஆண்டுகால சட்டப்போராட்டத்துக்குப்பின் 20 ரூபாய் திருடியவரை, லோக் அதலாத்தின்போது நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

20 ரூபாய்
20 ரூபாய்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியைச்சேர்ந்தவர் இஸ்மாயில் கான். இவர் மீது பாபுலால் என்பவர் புகார் அளித்தார். 1978-ம் ஆண்டு பாபுலால் பேருந்து டிக்கெட் ஒன்றை எடுக்க கியூ ஒன்றில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, பாபுலாலின் சட்டைப்பையிலிருந்து, அவருக்குத்தெரியாமல், இஸ்மாயில் 20 ரூபாயைத் திருடியுள்ளார். இது தொடர்பாக இஸ்மாயில் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு, கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இப்போது, பாபுலாலுக்கு வயது 61, இஸ்மாயிலுக்கு வயது 68. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அணில்குமார் நாம்தியோ, `எதிர்காலத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது’ என்று அவரிடமிருந்து ஒரு உறுதிமொழியைப் பெற்ற பிறகு விடுவித்தார்.

Vikatan

இதுதொடர்பாக புகார் அளித்த பாபுலால் பேசுகையில், ``நான் இஸ்மாயில்கானுக்கு எதிராக 1978-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடுத்தேன். அவர் கைது செய்யபட்டு சிலமாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு வந்து கொண்டுதான் இருந்தார்.

தீர்ப்பு
தீர்ப்பு

2004-ம் ஆண்டு முதல் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்தார். இதனால் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின் 3 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். இஸ்மாயில்கான் பொருளாதாரத்தில் பின்தங்கியவர். அவருக்கு குடும்பம் எதுவுமில்லை. ஜாமீனுக்காக விண்ணப்பிக்க போதுமான பணம் கூட அவரிடமில்லை. இதையடுத்து நீதிபதி லோக் அதலாத் மூலம் எங்களை அழைத்து வழக்கை முடித்துவைத்தார்” என்றார்.