Published:Updated:

அறிவிப்பின்றி நகைகளை ஏலம்விட்ட நிதி நிறுவனம் - சேவைக் குறைபாடு எனக் குட்டுவைத்த நுகர்வோர் நீதிமன்றம்

அரியலூர்

அடமானம் வைத்த நகையை எந்தவித முன்னறிவிப்புமின்றி ஏலம்விட்ட நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

அறிவிப்பின்றி நகைகளை ஏலம்விட்ட நிதி நிறுவனம் - சேவைக் குறைபாடு எனக் குட்டுவைத்த நுகர்வோர் நீதிமன்றம்

அடமானம் வைத்த நகையை எந்தவித முன்னறிவிப்புமின்றி ஏலம்விட்ட நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
அரியலூர்

அரியலூர் மாவட்டம், அரசு நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். அரசு சிமென்ட் ஆலையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற இவர், அரியலூரில் இந்தியா இன்ஃபோ லைன் என்ற நிதி நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான 240 கிராம் தங்க நகைகளை நான்கு தவணைகளாக அடகுவைத்து ரூ.4,76,000 கடன் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், அந்த நிதி நிறுவனம் வழங்கிய கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துமாறும் இல்லாவிட்டால் நகை ஏலம்விடப்படும் என்றும் செல்வராஜுக்குக் கடிதம் அனுப்பியிருந்தது.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் ஏலம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறையான அறிவிப்பை அனுப்பாமல், அவரின் நகைகள் ஏலத்தில் விடப்பட்டன. தனது நகைகள் ஏலம் விடப்பட்டது என்பதை அறிந்த செல்வராஜ் நிதி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ``எந்தத் தேதியில் எவ்வளவு தொகைக்கு நகைகள் ஏலம்விடப்பட்டது... யார் யார் ஏலத்தில் கலந்துகொண்டார்கள்...

நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்
நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்

ஏலத்தில் நகைகள் எவ்வளவு விலைக்குப் போனது?” போன்ற விவரங்களை நிதி நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் முழுமையான எந்தவிதத் தகவலையும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தனது நகைகளைத் திரும்பப் பெற்றுத் தருமாறும், சேவைக் குறைபாட்டுக்கு இழப்பீடு வழங்குமாறும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பிலும் சாட்சியங்களும் ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவருக்கு முறையாக அறிவிப்பு அனுப்பாமல் ஏலம்விட்டது சேவைக் குறைபாடு.

தங்க நகைகள்
தங்க நகைகள்

எனவே, அவர் அடமானம் வைத்த 240 கிராம் தங்க நகைகளுக்கு இன்றைய சந்தை மதிப்பு தொகையை நிதி நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும். அந்தப் பணத்திலிருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன் மற்றும் சாதாரண வட்டியைக் கழித்துக்கொள்ள வேண்டும். சேவைக் குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.