Published:Updated:

அன்னா ஹசாரே: அன்று, ஊழலை எதிர்த்தார்... இன்று, புகாரில் சிக்கினார்!

சுப்ரீம் கோர்ட்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

அன்னா ஹசாரே: அன்று, ஊழலை எதிர்த்தார்... இன்று, புகாரில் சிக்கினார்!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

Published:Updated:
சுப்ரீம் கோர்ட்

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த 2011-ம் ஆண்டுக் காலத்தில் ஊழலுக்கெதிராக டெல்லியில் கடுமையாகப் போராடியவர் மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் மூலமாகத்தான் டெல்லியின் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பவரே வெளியுலகுக்குத் தெரியவந்தார்.

அன்னா ஹசாரே: அன்று, ஊழலை எதிர்த்தார்... இன்று, புகாரில் சிக்கினார்!

மகாராஷ்டிர மாநிலம், ராலேகன் சித்தி எனுமிடத்தில் சொந்தமாகத் தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே, `ஊழலை ஒழிப்பதற்காக லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வர வேண்டும்' என்றுதான் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும் அவருடைய போராட்ட நோக்கம் நிறைவேறியபாடில்லை. எப்போதாவது இதுகுறித்து அறிக்கை மட்டும் விடும் ஹசாரே, போராட்டத்தையெல்லாம் கைவிட்டு, சொந்தக் கிராமத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்நிலையில்தான், அன்னா ஹசாரே நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்து வரும் நிதியை அவரே அபகரித்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், `அன்னா ஹசாரே தொண்டு நிறுவனங்களுக்காக வழங்கப்பட்ட நிதியை அபகரித்துவிட்டார். `ஹசாரே ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட்' என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, மாநில அரசிடமும் 65 லட்சம் ரூபாயை வாங்கி அதையும் அபகரித்துக்கொண்டுவிட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்' என்றெல்லாம் புகார்களை அடுக்கியுள்ளார் சர்மா.

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

தற்போது, அன்னா ஹசாரே, மாநில அரசு மற்றும் சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கும் சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதா... வேண்டாமா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தவும் சம்மதித்துள்ளது. இதன்மீதான விசாரணை 4 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக, அன்னா ஹசாரே தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.