Published:Updated:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 25 வருட சிறை முடிந்ததும் அபு சலேமை விடுவிக்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட்

அபு சலேம்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை முடிந்த பிறகு அபு சலேமை விடுவிக்கவேண்டியது அரசின் கடமை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 25 வருட சிறை முடிந்ததும் அபு சலேமை விடுவிக்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை முடிந்த பிறகு அபு சலேமை விடுவிக்கவேண்டியது அரசின் கடமை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Published:Updated:
அபு சலேம்

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 12 இடங்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணமான தாவூத் இப்ராஹிம் தன் கூட்டாளிகளுடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறான். தாவூத் இப்ராஹிம் கூட்டாளி அபு சலேம் போர்ச்சுக்கல் நாட்டில் பதுங்கியிருந்தான். அவனையும் அவன் காதலி மோனிகா பேடியையும் அந்நாட்டு போலீஸ் 2002-ம் ஆண்டு கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு அபு சலேமும், அவன் காதலியும் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டனர். இந்தியாவுக்கு அவனை நாடு கடத்தும்போது இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி அபு சலேமை தூக்கிலிடக்கூடாது என்றும், 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்ககூடாது என்றும் போர்ச்சுக்கல் அரசு கேட்டுக்கொண்டது. மத்திய அரசும் அதனை ஏற்றுக்கொண்டு அவனை நாடு கடத்திக் கொண்டுவந்தது. அபு சலேம்மீது மும்பை தொடர் குண்டு வழக்கு மட்டுமல்லாது, இசையமைப்பாளர் குல்சன் குமார் கொலை, நடிகை மணிஷா கொய்ராலா செயலாளர்மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கு என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மும்பை குண்டு வெடிப்பு
மும்பை குண்டு வெடிப்பு
கோப்புக் காட்சி

2015-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 1995-ம் ஆண்டு பில்டர் பிரதீப் என்பவரை சுட்டுக் கொலைசெய்த வழக்கில் அபு சலேமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு அபு சலேம் முக்கிய பங்காற்றினான். ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும், வெடிகுண்டுகளை எடுத்துச்சென்று வெவ்வேறு இடங்களில் வைக்க தேவையான ஆள்களை உத்தரப்பிரதேசத்தில் இருந்து அழைத்து வருவதிலும் முக்கிய பங்கு வகித்தான். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலும் அபு சலேம் 2017ம் ஆண்டு தண்டிக்கப்பட்டுள்ளான். தற்போது அபு சலேம் போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அபு சலேம் தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு 2002ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அன்றைய தேதியிலிருந்து தனது தண்டனைக் காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அபு சலேம்
அபு சலேம்

அதோடு மத்திய அரசு போர்ச்சுக்கல் அரசிடம் சொன்னபடி 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்தபிறகு விடுதலை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் அபு சலேம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனு நீதிபதிகள் கே.கவுல், சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ``போர்ச்சுக்கல் அரசிடம் கொடுத்துள்ள உத்தரவாதத்தின் படி அபு சலேமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த பிறகு விடுவிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். அபு சலேமின் தண்டனைக் காலம் 25 ஆண்டுகள் முடிந்த உடன் ஒரு மாதத்தில் மத்திய அரசே இதற்கான பணிகளை தொடங்க வேண்டும்" என்று தெரிவித்தனர். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு 2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதில் யாகூப் என்பவனின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் 10 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.