Published:Updated:

ஆதாரமில்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்த இளைஞர்கள்! - ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் அவர்கள் இருவரும் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஆதாரமில்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்த இளைஞர்கள்! - ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் அவர்கள் இருவரும் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Published:Updated:
அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஒன்று இருக்கிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் நீதிமன்ற வளாகம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்படவிருப்பதாகப் பத்திரிகை ஒன்றில் செய்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, 'பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டால், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் போகும்' என்று அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான பாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்தனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் அவர்கள் இருவரும் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், ``முழுமையாக ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களுடன் மட்டுமே பொதுநல வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஆனால், நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதற்குரிய எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மனுதாரர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கிறோம்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.