Published:Updated:

கடவுள் மறுப்பு கொள்கை; சர்ச்சையான பதிவு! - கோவை இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

அனீஸ்
News
அனீஸ்

கோவை கடவுள் மறுப்பு கொள்கையைக்கொண்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். இஸ்லாமியரான இவர், கடவுள் மறுப்பு கொள்கையைக்கொண்டவர். அனீஸ் முகநூல் பக்கத்தில், கடவுள் மறுப்பு கொள்கை தொடர்பாக ஏராளமான கருத்துகளை `Ex Muslim’ என்ற அடைமொழியுடன் பதிவுசெய்வார்.

அனீஸ்
அனீஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த வகையில் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் குறித்து விமர்சித்து பதிவுபோட்டுள்ளார். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணியை ஒப்பிட்டு இஸ்லாம் குறித்து விமர்சித்திருக்கிறார்.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எனக் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் இது குறித்துப் புகார் அளித்தார். அதனடிப்படையில், மதங்களுக்கு இடையே பகை உணர்வைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அனீஸைக் கைதுசெய்தனர் போலீஸார்.

அனீஸ்
அனீஸ்

அனீஸின் கைதுக்கு பல்வேறு இடங்களிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. இதற்கிடையே, அனீஸின் ஜாமீன் மனு கோவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது நீதிபதி சக்திவேல், ``மனுதாரர் கடவுள் மறுப்பாளர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு, தனது கருத்துகளை வெளியிட அவருக்கு உரிமை உண்டு. அதேநேரத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் அது இருக்கக் கூடாது.

தீர்ப்பு
தீர்ப்பு

மனுதாரர், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் உணரவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

அனீஸ் தினமும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.