Published:Updated:

`சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!’- கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்ஸோ நீதிமன்றம்

சதீஸ்குமார்
News
சதீஸ்குமார்

கோவையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே, அருகம்பாளையம் பகுதியில் விவசாயக் குடும்பம் ஒன்று தோட்டத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தது. அந்த விவசாயிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தச் சம்பவம் நடந்தது 2017-ம் ஆண்டு. அப்போது, அந்த விவசாயியின் மகள், ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி படம்

இதனிடையே, கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் (27) என்பவர், அருகம்பாளையம் அருகே உள்ள குன்னத்தூர்புதூர் பகுதியில் தங்கியிருந்து கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்தார். அப்போது, சதீஸ்குமார் அந்தச் சிறுமியை அடிக்கடி பின்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மாணவி தங்களது தோட்டத்தில் உள்ள மோட்டாரை அணைக்கச் சென்றுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த நேரத்தில் அங்கு வந்த சதீஷ்குமார், `திருமணம் செய்து கொள்ளலாம் வா’ என்று சிறுமியை வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில், ஓதிமலை பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளார். பிறகு, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சதீஸை கைது செய்தனர்.

வன்கொடுமை
வன்கொடுமை

இந்த வழக்கில் கோவை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ராதிகா குற்றவாளியான சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.