Published:Updated:

கோவை மாணவி வழக்கு... பள்ளி முதல்வருக்கு ஜாமீன்... போலீஸ் கஸ்டடிக்குச் செல்லும் ஆசிரியர்?!

மீரா ஜாக்சன்

கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாணவி வழக்கு... பள்ளி முதல்வருக்கு ஜாமீன்... போலீஸ் கஸ்டடிக்குச் செல்லும் ஆசிரியர்?!

கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மீரா ஜாக்சன்

கோவை தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்துவந்த 17 வயது மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததே மாணவி உயிரிழப்புக்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, தகவல் தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ஜாமீன் கேட்டு மீரா கோவை போச்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில், மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, மீரா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தீர்ப்பு
தீர்ப்பு

மேலும், மாணவியின் குடும்பத்துக்கு 30 நாள்களுக்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை ஐந்து நாள்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, போக்சோ நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருக்கிறது. மிதுன் சக்கரவர்த்தியை கஸ்டடியில் விசாரிக்கும் பட்சத்தில், மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.