Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு சம்மன்! - ஒருநபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை தொடக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இடைக்கால அறிக்கையை வழங்கிய நீதிபதி
இடைக்கால அறிக்கையை வழங்கிய நீதிபதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் ஆறு மாதகால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 29-வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை முந்தைய அ.தி.மு.க அரசு நியமித்தது. துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சூழ்நிலை, அதைத் தொடர்ந்து தூத்துக்குடி, அதன் சுற்றுப்புறத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், 27 கட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கடந்த மே 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன். அந்த அறிக்கையில், இந்தப் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன்
விசாரணை ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்குக் காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், இது தவிர ஒரு நபர் வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துவிட்டதால் வாழ்வாதாரத்தையே இழந்து வாடும் அவரின் 72 வயது தாய்க்கு ரூ.2 லட்சமும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு அவை வழங்கப்பட்டன.

இதையடுத்து, 2018, மே 22-ம் தேதிக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட (புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர) 38 வழக்குகளையும், அது தொடர்புடைய 13 அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஒருநபர் ஆணையத்தின் 28-வது கட்ட விசாரணை கடந்த ஜூலை 5-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி நிறைவுபெற்றது. ``இதுவரை நடைபெற்ற 28 கட்ட விசாரணைகளில் இதுவரை 1,153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில், 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை

இதில், 1,127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியிருந்தார். இந்த ஆணையத்தின் கால அவகாசத்தைக் கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியிலிருந்து இந்த மாதம் 22-ம் தேதி (நேற்று) வரை நீட்டித்து ஏற்கெனவே ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று  பணிநியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்

`கொரோனா ஊரடங்கால் விசாரணை தடைப்பட்டதாலும், இன்னும் 300 பேர் வரை விசாரிக்கப்படவிருப்பதாலும், ஆணையத்தின் கால அளவை நீட்டிக்க வேண்டும்’ என ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக (இன்று) 23-ம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு 2022, பிப்ரவரி 22-ம் தேதி வரை விசாரணைக்கான கால அளவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. `அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழு விசாரணையை முடித்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருநபர் விசாரணை ஆணைய முகாம் அலுவலகம்
ஒருநபர் விசாரணை ஆணைய முகாம் அலுவலகம்

விசாரணை ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் இன்று (23-ம் தேதி) தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடைபெறவிருக்கிறது. இந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள், காயம்பட்ட காவலர்கள், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `1,153 பேருக்கு சம்மன்; 813 பேர் ஆஜர்!’ - விசாரணை ஆணையம் தகவல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு