Published:Updated:

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

திருநாவுக்கரசர், அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
திருநாவுக்கரசர், அழகிரி

இந்தத் தீர்ப்பை ஆதரிக்கும் திராவிட இயக்கத்தில் யாராவது இறந்தால் இப்படிக் கொண்டாடுவீர்களா?

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

இந்தத் தீர்ப்பை ஆதரிக்கும் திராவிட இயக்கத்தில் யாராவது இறந்தால் இப்படிக் கொண்டாடுவீர்களா?

Published:Updated:
திருநாவுக்கரசர், அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
திருநாவுக்கரசர், அழகிரி
பேரறிவாளன்
பேரறிவாளன்

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸில் பலரும் எதிர்க்குரல் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரின் ஆதரவாளர்கள் 15 பேரும் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகியதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸாரின் ரியாக்‌ஷன் என்ன?

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

``ஆளுநர் மீதான தவற்றால், உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்திருக்கிறது. அவர் குற்றமற்றவர் என்றோ, நிரபராதி என்றோ விடுதலை செய்யவில்லை. சட்டத்தின்படி இது சரியென்றாலும் தர்மத்தின்படி தவறு!’’

- திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி

``பேரறிவாளன் நிரபராதி என்று யாரும் கூறவில்லை. ஒரு குற்றவாளியை வெளியே கொண்டுவரப் போராடி...வெளியே வந்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டாடி... ஒரு மாபெரும் தலைவரின் படுகொலை கொண்டாடப்படுவதை ஏற்க முடியவில்லை!’’

- வி.ஆர்.சிவராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

``இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைவர்கள் மன்னித்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் என்றரீதியில் நாங்கள் மன்னிக்க மாட்டோம்!”

- நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்.

``இந்தத் தீர்ப்பை ஆதரிக்கும் திராவிட இயக்கத்தில் யாராவது இறந்தால் இப்படிக் கொண்டாடுவீர்களா? பயங்கரவாதியைக் கொஞ்சுவதையும், கட்டிப்பிடிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!”

- பொன்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்.

``ஒரு தலைவரைக் கொன்றவர்... கொலையாளி என்று நிரூபிக்கப்பட்டவர்... சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி வெளியே வந்திருக்கலாம். அதைக்கூடத் தப்பு சொல்லவில்லை. ஆனால், முதலமைச்சர் ஒரு கொலையாளியைப் பார்த்ததும், சால்வை அணிவித்துக் கட்டித் தழுவியது சகிக்க முடியவில்லை. மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

- இமயா கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்.

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்!’’

- கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.

``பேரறிவாளனை வரவேற்று ஒரு தியாகிபோல் தேநீர் விருந்து கொடுப்பது வெட்கக்கேடானது. காங்கிரஸ், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். கேவலம், ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவிக்காக இப்படி இருக்கலாமா... அப்படி ஒரு பதவி தேவையில்லை. திரும்ப ஒப்படைக்க வேண்டும். தொண்டர்களைப் பேசவிடாமல் சமாதானத் துணியை வாயில் கட்டிப் போராட்டம் நடத்தியதில் எந்தப் பலனும் இல்லை!’’

- தியாகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்.

``உலக நாடுகள் போற்றும் தலைவரான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை, தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கொண்டாடுவதை ஏற்க முடியவில்லை. எனவே, தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, எனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்!’’

- சிற்றரசு, காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்.

``ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம்... நமது முதலமைச்சர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்க முடியவில்லை!’’

- முத்தழகன், காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர்.

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

``முன்னாள் பிரதமரைக் கொன்ற குற்றவாளிகளை விடுவிக்க உடந்தையாக இருக்கப்போகிறீர்களா மோடி அவர்களே... உங்கள் மௌனம் அவர்களின் விடுதலைக்குச் சம்மதமா... பா.ஜ.க-வின் அற்ப அரசியலே குற்றவாளியின் விடுதலைக்கு வழிவகுத்திருக்கிறது!’’

- ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்.

பேரறிவாளன் விடுதலையும்... காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும்!

``கொலை வழக்கில் ஈடுபட்டு வெளியே வந்தவரைக் கொண்டாடுபவர்கள், தங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கொண்டாடுவார்களா... முன்னாள் பிரதமரைக் கொன்றவரே 31 ஆண்டுகளில் விடுதலை ஆகலாம் என்றிருக்கும்போது, சாமானியர்களைக் கொன்றால் சில மணி நேரத்திலேயேகூட வெளியே வர முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்!’’

- செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism