நெல்லை கே.டி.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் பிரம்மா. இவர் 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தொலைபேசி இணைப்பு கோரி விண்ணப்பித்தார். அதற்கான சேவைக் கட்டணமாக ரூ.500 செலுத்தியுள்ளார்.
அவருக்கு 7 நாள்களுக்குள் தொலைபேசி இணைப்பு வழங்க வேண்டிய பி.எஸ்.என்.எல் நிறுவனம் 50 நாள்களைக் கடந்த பின்னரும் இணைப்புக் கொடுக்கவில்லை. இது சேவைக் குறைபாடு என்பதால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மனுதாரரான பிரம்மா வழக்கு தாக்கல் செய்த பின்னர், 150 நாள்கள் கழித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் அவருக்கு தொலைத்தொடர்பு இணைப்பு கொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், `ஏழு தினங்களுக்குள் மனுதாரருக்கு தொலைபேசி இணைப்பு கொடுக்கத் தவறியது சேவை குறைபாடு' எனத் தீர்ப்பளித்தது.

அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ஐந்தாயிரம் ரூபாயும் வழக்கு செலவுத் தொகையாக மூன்றாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேல் முறையீட்டின்போது பி.எஸ்.என்.எல் தரப்பில், `நெல்லை நகரம் முழுவதும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே குறித்த காலத்துக்குள் மனுதாரருக்குச் சேவை அளிக்க இயலவில்லை’ எனத் தெரிவித்தது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த மாநில நுகர்வோர் ஆணையம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.
மாநில நுகர்வோர் ஆணைய மதுரைக் கிளையின் தலைவர் நீதியரசர் ராஜசேகர் மற்றும் உறுப்பினர் முருகேசன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், `மனுதாரருக்கு ரூபாய் 8000 வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. அந்தத் தொகையைத் தற்போது வரை 6 சதவிகித வட்டியுடன் மனுதாரர் பிரம்மாவுக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.