Published:Updated:

`டிக்கெட்டுக்கு பதில் கூப்பன்; மனஉளைச்சல்!’- நெல்லை தியேட்டர் உரிமையாளரைத் தண்டித்த நீதிமன்றம்

judgement
News
judgement

நெல்லையில் அரசு அனுமதித்த தொகையைவிடவும் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்கு நிர்வாகம், ரூ.20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், முருகன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள பாம்பே தியேட்டரில் `கடம்பன்’ என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். அந்தத் தியேட்டரில் பால்கனியிலிருந்து படம் பார்ப்பதற்கு ரூ.50 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. 

ஆனால், முருகனிடமிருந்து ரூ.150 பெற்றுக்கொண்ட தியேட்டர் நிர்வாகத்தினர், அவருக்கு டிக்கெட் வழங்குவதற்குப் பதிலாக கூப்பன் கொடுத்து உள்ளே அனுமதித்துள்ளனர். அதில் டிக்கெட்டுக்கான விலையைப் பற்றி எந்தத் தகவலும் இருக்கவில்லை. அந்தக் கூப்பனில் டிக்கெட் விலையை அச்சிடவும் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனால் தன்னிடம் கூடுதலாக 100 ரூபாய் வசூலித்தது குறித்து தியேட்டரின் மேலாளரிடம் கேட்டதற்கு, `இந்தக் கட்டணத்தில் படம் பார்க்க இஷ்டம் இருந்தால் பார்க்கலாம். இல்லாவிட்டால் வெளியே போய்விடலாம்’ என அலட்சியமாகப் பதில் சொல்லியிருக்கிறார். அத்துடன், இடைவேளை நேரத்தில் தியேட்டரில் பல்வேறு விளம்பரங்களையும் திரையிட்டு மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நுகர்வோர் நீதிமன்றம்
நுகர்வோர் நீதிமன்றம்

இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முருகன். அதில், கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் தேவையற்ற விளம்பரங்களைத் திரையிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 95,000 ரூபாய் இழப்பீடு கோரியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களான முத்துலட்சுமி, சிவமூர்த்தி ஆகியோர் மனுதாரர் முருகனுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்குச் செலவுக்காக ரூ.5,000 மற்றும் டிக்கெட்டுக்காக கூடுதலாக வசூலித்த ரூ.100 என மொத்தம் 20,100 பணத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க உத்தரவிட்டனர். ஒரு மாதத்தில் கொடுக்கத் தவறினால் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய வழக்கறிஞர் பிரம்மா, ``முருகனுக்கு ஏற்பட்டது சேவைக் குறைபாடு என்று வாதிட்டேன். தியேட்டர் தரப்பினர், முருகனிடம் கூப்பன் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் பணம் பெறாத நிலையில் அவர் வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், கூப்பன் என்பதே பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியாகக் கொடுப்பதுதான் என்பதை நிரூபித்ததுடன், அரசு அனுமதி பெறாமல் வர்த்தக விளம்பரங்களைத் திரையிட்டதையும் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தோம்.

பொதுவாகவே புதுப் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் டிக்கெட் விலையை அதிகமாக்கி சில தியேட்டர்கள் விற்பனை செய்கின்றன. தமிழகம் முழுவதுமே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இனி அதுபோல கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும் என்கிற நிலையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இனி கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும் என்கிற நிலையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கறிஞர் பிரம்மா

சமீபகாலமாக பொதுமக்களிடம் நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. எங்கெல்லாம் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ அதை எல்லாம் சட்டரீதியாகச் சந்திக்கும் மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான நிலைமை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றார் அக்கறையுடன்.