Published:Updated:

தாமதமாக கிடைத்த நீதி: 26 ஆண்டு விசாரணைக்குப் பிறகு 70 வயது முதியவரை அப்பாவி என விடுவித்த நீதிமன்றம்!

தீர்ப்பு - மாதிரி படம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 26 ஆண்டுகள் கழித்து அப்பாவி என்று கூறிவிடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தாமதமாக கிடைத்த நீதி: 26 ஆண்டு விசாரணைக்குப் பிறகு 70 வயது முதியவரை அப்பாவி என விடுவித்த நீதிமன்றம்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 26 ஆண்டுகள் கழித்து அப்பாவி என்று கூறிவிடுவிக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
தீர்ப்பு - மாதிரி படம்

நீதி சிலநேரங்களில் மிகவும் தாமதமாகக் கிடைக்கும். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு 26 ஆண்டுகள் கழித்துக் கிடைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்திலுள்ள முஜாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் ரதன். விவசாயக் கூலி வேலைசெய்து தனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு, நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு 44 வயதாக இருந்தபோது காலையில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாகத் தங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ரதன் தன்னிடம் எந்தவிதமான துப்பாக்கியும் இல்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் கேட்காமல் உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ரதனிடம் ஆயுதம் பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஆயுதத்தைக் கடைசிவரை காட்டவே இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்னையில் ரதன் கைதுசெய்யப்பட்டிருந்தார் எனக் கூறப்பட்டது.

தீர்ப்பு
தீர்ப்பு

இரண்டு மாதத்ங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரதன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 26 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வரும்போது ரதன் நீதிமன்றத்துக்கு வருவார். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை நீதிமன்றத்துக்கே செலவிட்டார். 26 ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

ரதன் அப்பாவி என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து ரதன் கூறுகையில், ``போலி வழக்கால் எனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. என் பிள்ளைகளை முழுமையாகப் படிக்கவைக்க முடியவில்லை. நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதில் எனது பாதி வாழ்க்கை வீணாகிவிட்டது. நான் அப்பாவி என்பதை நிரூபிப்பதற்காக ஏறத்தாழ 30 ஆண்டுகள் போராடியிருக்கிறேன். இறுதியாக உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் இதற்கு நான் அதிக விலை கொடுக்கவேண்டியிருந்தது. இப்போது 70 வயதாகிறது” என ரதன் தெரிவித்தார். 26 ஆண்டுகளில் 400 நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரதன் கடந்த 2020-ம் ஆண்டே இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கையும் மேல் முறையீடு செய்தார். அதில் இப்போதுதான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!