Published:Updated:

திருமணமாகாத பெண், இசைவு உறவு, 20 வாரங்களுக்கு மேல் கருக்கலைக்க அனுமதியில்லை: டெல்லி உயர் நீதிமன்றம்

Abortion Law (Representational Image) ( Pexels )

``திருமணமாகாத பெண், அவர் காதலர் இருவரின் ஒருமித்த பாலியல் இசைவுடன்தான் பெண் கர்ப்பமாகி இருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, 20 வாரங்களுக்கு மேல் ஆன திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சட்டம் அனுமதிக்காது’’ என்று கூறியுள்ளனர் நீதிபதிகள்.

திருமணமாகாத பெண், இசைவு உறவு, 20 வாரங்களுக்கு மேல் கருக்கலைக்க அனுமதியில்லை: டெல்லி உயர் நீதிமன்றம்

``திருமணமாகாத பெண், அவர் காதலர் இருவரின் ஒருமித்த பாலியல் இசைவுடன்தான் பெண் கர்ப்பமாகி இருக்கிறார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, 20 வாரங்களுக்கு மேல் ஆன திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சட்டம் அனுமதிக்காது’’ என்று கூறியுள்ளனர் நீதிபதிகள்.

Published:Updated:
Abortion Law (Representational Image) ( Pexels )

திருமணத்துக்கு முன் கர்ப்பமடைந்த பெண் ஒருவரின் 23 வார கருவை கலைக்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Abortion
Abortion

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் காதலன் திருமணம் செய்துகொள்வதாகத் தன்னிடம் கூறியதை நம்பி தான் கருவுற்றதாகவும், அவர் தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதால் கருவைக் கலைக்க அனுமதி அளிக்குமாறும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச், பெண்ணின் கருத்தரிப்பு இசைவு உறவால் உருவானது என்றும், இது மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் பிரக்னன்சி (Medical Termination of Pregnancy Rules 2003) விதியின் எந்தப் பிரிவின் கீழும் வராது என்றும் கூறி, இளம்பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய கருக்கலைப்பு சட்டத்தின் கீழ், பெண்கள் கரு உருவான 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி உண்டு. சில பெண்களுக்கு இது 24 வாரங்கள் வரை அனுமதிக்கப்படுகிறது.
குறிப்பாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கும், மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் பேரழிவு சூழல், அவசரக்கால சூழ்நிலைகளால் கர்ப்பம் ஆனவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். கருவில் உள்ள குழந்தை பிறந்தால் அது கடுமையான உடல் குறைபாடு அல்லது மன இயல்பால் பாதிக்கப்படும் அபாயம் இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் சட்டம் கூறுகிறது.

judgement
judgement

ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கில் இந்தச் சூழ்நிலைகள் எதுவும் இல்லாமல் இருவரும் ஒருமித்துதான் கருவுருதல் நடந்திருக்கிறது என விசாரணையில் தெரிய வந்துள்ளதால் 20 வாரங்களுக்கு மேல் ஆன திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க சட்டம் அனுமதிக்காது என்று கூறியுள்ளனர் நீதிபதிகள். இது சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடியது என்பதால் அதைத் தாண்டி தாங்கள் செல்ல முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது நீதிமன்றம். தொடர்ந்து, இந்தக் குழந்தை பிறக்கும் பட்சத்தில் தன் மன மற்றும் உடல் நலன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மனுதாரர் கூறினார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், `ஏன் கொல்ல நினைக்கிறீர்கள்? அரசிடம் ஒப்படையுங்கள். இங்கு குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு எனப் பல பெற்றோர்கள் வரிசையில் இருக்கின்றனர்’ என்று கூறினர் நீதிபதிகள்.