Published:Updated:

`ஜூகிபா',`எந்திரன்': 16 ஒற்றுமைகள்; 10 ஆண்டுகள்; ஷங்கருக்குப் பிணையில்லா பிடிவாரன்ட் - என்ன பிரச்னை?

ஷங்கர் மற்றும் ரஜினி ( Photo: Vikatan )

`ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி. 10 ஆண்டுகளாக எந்திரன் கதைத் திருட்டு வழக்கில் என்ன நடந்தது?!

`ஜூகிபா',`எந்திரன்': 16 ஒற்றுமைகள்; 10 ஆண்டுகள்; ஷங்கருக்குப் பிணையில்லா பிடிவாரன்ட் - என்ன பிரச்னை?

`ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி. 10 ஆண்டுகளாக எந்திரன் கதைத் திருட்டு வழக்கில் என்ன நடந்தது?!

Published:Updated:
ஷங்கர் மற்றும் ரஜினி ( Photo: Vikatan )

``என் கதையைத் திருடி `எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, கோடிக் கணக்கில் சம்பாதித்திருக்கின்றனர். இது காப்புரிமை சட்டப்படி கிரிமினல் குற்றம்'' என்று குற்றம்சாட்டி 2011-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார் ஆரூர் தமிழ்நாடன் என்பவர். எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், `எந்திரன்’ படத்தின் இயக்குநர் ஷங்கரின் பெயரும், அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தன.

ஆரூர் தமிழ்நாடன்
ஆரூர் தமிழ்நாடன்

யார் இந்த ஆரூர் தமிழ்நாடன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத்தாளர்,கவிஞர் என இலக்கியத்துறையில் பன்முகங்களைக்கொண்ட ஆரூர் தமிழ்நாடன், தனியார் தமிழ்ப் பத்திரிகையின் முதன்மை துணை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இவரது முதல் கவிதை நூலான `கற்பனைச் சுவடுகள்' கருணாநிதியின் அணிந்துரையோடு வெளியானது. புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என ஏராளமான இலக்கியப் படைப்புகளை எழுதியிருக்கிறார் இவர். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் பற்றிய நினைவுப் பதிவுகளை `ஆனந்த யாழ்' என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூகிபா - எந்திரன்!

1996-ல் `இனிய உதயம்' பத்திரிகையில், ரோபோவை மையமாகவைத்து ஆரூர் தமிழ்நாடன் எழுதிய `ஜூகிபா' என்ற கதை வெளியானது. பின்னர் 2007-ல் `திக் திக் தீபிகா' என்ற நூலிலும் இந்தக் கதை இடம்பெற்றது. இதையடுத்து 2010 அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியானது `எந்திரன்.’
எந்திரன்
எந்திரன்

ஆரூர் தமிழ்நாடனின் குற்றச்சாட்டு!

``1996-ல் `இனிய உதயம்' பத்திரிகையில் நான் எழுதிய `ஜூகிபா' கதையைத் திருடித்தான் `எந்திரன்' படம் எடுக்கப்பட்டிருக்கிறது'' என்பது ஆரூர் தமிழ்நாடனின் குற்றச்சாட்டு. 2010-ல் எந்திரன் படம் வெளியான சில நாள்களில் இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ஆரூர் தமிழ்நாடன். வக்கீல் நோட்டீஸுக்கு அவர்கள் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கர் மீதும், கலாநிதி மாறன் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் தமிழ்நாடன். இந்தப் புகாரை நீண்ட விசாரணைக்குப் பிறகே போலீஸார் எடுத்துக்கொண்டதாகவும், இது தொடர்பாக எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றும் ஆரூர் தமிழ்நாடன் தரப்பினர் அந்தச் சமயத்தில் குற்றம்சாட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு!

இதையடுத்து எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஷங்கர், கலாநிதி மாறன் ஆகியோர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் ஆரூர் தமிழ்நாடன். இந்த வழக்கில் ஆஜராகுமாறு குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் சம்மன் அனுப்பியது எழும்பூர் நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து, ஷங்கரும் கலாநிதி மாறனும், `நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த சிவில் வழக்கில், 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பு வழங்கினார் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி. அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது...

கலாநிதி மாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது. `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' சினிமாவுக்கும் பல ஒற்றுமைகளை உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு
இந்தத் தீர்ப்பை வாசித்தபோது, `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி.

பிணையில்லா பிடிவாரன்ட்!

தொடர்ந்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் இயக்குநர் ஷங்கர். `இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை' என்று சொல்லி ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை 2020 அக்டோபரில் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து ஜனவரி 29, 2021 அன்று இந்த வழக்கின் மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஒருமுறைகூட இயக்குநர் ஷங்கர் ஆஜரானதில்லை. இந்தநிலையில், 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புகார்தாரரான ஆரூர் தமிழ்நாடன் ஆஜராகியிருந்தார். ஆனால், இயக்குநர் ஷங்கர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. ஷங்கர் தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஷங்கர்
ஷங்கர்

இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டார். அதோடு இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 19-ம் தேதி முதல் நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு வேகமெடுத்திருக்கும் `எந்திரன்’ கதை திருட்டு வழக்கும், ஷங்கருக்கு எதிரான பிணையில் வர முடியாத பிடிவாரன்ட் உத்தரவும் கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism