Published:Updated:

`உங்கள் சொத்துன்னு போட்டிருந்தது; எடுத்துவிட்டேன்'- நீதிபதியைச் சிரிக்க வைத்த `காமெடி' இளைஞர்!

ரயில்வே தொடர்பாக நீதிபதி ஒருவர் தான் சந்தித்த `காமெடி' வழக்கு குறித்து பேசியுள்ளார்.

Justice HN Nagamohan Das
Justice HN Nagamohan Das

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ், சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மக்களிடையே வழக்கறிஞர்கள் இயல்பாக பழகி, சட்டம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தவர் அந்த நிகழ்வில் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். ``ஒரு நாள் இளைஞர் ஒருவர் பெங்களூரிலிருந்து ரயிலில் ஏறி மைசூரு ரயில் நிலையத்தில் இறங்கினார்.

train
train

அப்போது, ரயில் நிலையத்தில் இருந்த இரும்புக் கம்பியைப் பார்த்த அவர் எதையாவது தயாரிக்கப் பயன்படுத்தலாம் என்று நினைத்து அந்தக் கம்பியை எடுத்துக்கொண்டு நடந்தார். ஆனால் கேட்டில் இருந்த ரயில்வே போலீஸார் அவரை பிடித்துவிட்டனர். பின்னர் வழக்கு பதிந்து மாஜிஸ்திரேட் முன்னால் அந்த இளைஞரை ஆஜர்படுத்தினர் போலீஸார். பார்க்க `டீசன்ட் லுக்'குடன் இருந்த இளைஞரிடம் நீதிபதி, ``என்ன படித்துள்ளீர்கள்'' என நீதிபதி விசாரித்தபோது, அந்த இளைஞர் டிகிரி முடித்திருந்தது தெரியவந்தது.

அப்போது ``பட்டப்படிப்பு படித்துவிட்டு நீங்கள் ஏன் இது போன்ற செயலைச் செய்தீர்கள்'' என அந்த இளைஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ``ரயில்நிலையத்தில் இருந்த பலகை ஒன்றில், ``ரயில் நிலையத்தின் சொத்துகள், உங்கள் சொத்துகள் போன்று பார்த்துக்கொள்ளுங்கள்” என எழுதியிருந்தது. அதனால் தான் அங்கிருந்த இரும்புக் கம்பியை நான் எடுத்துக்கொண்டு வந்தேன்” எனக் கூறினார். அவரின் பதிலைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்" எனக் கூறினார்.

`உங்கள் சொத்துன்னு போட்டிருந்தது; எடுத்துவிட்டேன்'- நீதிபதியைச் சிரிக்க வைத்த `காமெடி' இளைஞர்!

தொடர்ந்து மேலும், ``இப்படிப்பட்ட மாணவர்களையும் நாம்தாம் உருவாக்குகிறோம். அதனால் வக்கீல்கள் மக்களிடையே இயல்பாக பழகி சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதுடன் அங்குள்ள மக்களுடன் பழகி அவர்களுக்கு தேவையான சட்ட விழிப்புணர்வைச் செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.