Published:Updated:

36-ம் கட்ட விசாரணையுடன் நிறைவடைகிறது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணை!

அருள் வடிவேல் சேகர்

`ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணைகளில் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.' - அருள் வடிவேல் சேகர்

36-ம் கட்ட விசாரணையுடன் நிறைவடைகிறது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணை!

`ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணைகளில் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.' - அருள் வடிவேல் சேகர்

Published:Updated:
அருள் வடிவேல் சேகர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க அரசு நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு 3 ஆண்டுகளைக் கடந்து நடந்துவருகிறது. 27 கட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கடந்த 2021-ம் ஆண்டு, மே 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன்.

அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் நீதிபதி
அருணா ஜெகதீசன் - ஆணையத்தின் நீதிபதி

அந்த அறிக்கையில், நீதிபதி அருணா ஜெகதீகன் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்று நிறைவேற்றியது. ``துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து 3 ஆண்டைக் கடந்துவிட்டது. மாதத்தில் 5 நாள்கள் மட்டும் விசாரணை நடத்தினால் எப்படி விசாரணையை முடிக்க முடியும். கொரோனா பரவலால் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது எனக் காரணம் கூறப்பட்டாலும், மாதத்தில் 5 நாள்கள் மட்டும் விசாரணை செய்வதும், ஆணையத்தின் விசாரணைக் கால அளவை நீட்டித்துக்கொண்டே செல்வதும் முறையல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி தாமதப்படுத்தப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதனால், விசாரணை நாள்களை அதிகப்படுத்தி விரைவாக முடிக்க வேண்டும்" எனப் பல தரப்பினரும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதேபோல, ``விசாரணையை 2022-ம் ஆண்டு, பிப்ரவரி 22-ம் தேதிக்குள் முடித்து விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்” என பொதுத்துறைச் செயலாளர் ஜெகநாதனும் அரசாணையில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஒருநபர் ஆணையத்தின் விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டது.

முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட முற்பாதி அறிக்கை
முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட முற்பாதி அறிக்கை

இந்த நிலையில், 35-ம் கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார், தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட ஆறு பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

35-ம் அமர்வு விசாரணை, இன்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்த 35-ம் அமர்வு விசாரணையில் ஆஜராவதற்காக 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 5 பேர் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராவதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதை ஏற்று, அவர் அடுத்த 36-ம் கட்ட விசாரணைக்கு அழைக்கப்படுவார். ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறும்.

விசாரணை முகாம் அலுவலகம்
விசாரணை முகாம் அலுவலகம்

அப்போதைய தமிழக காவல்துறை தலைவர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒருநபர் ஆணையத்தின் 36-ம் அமர்வுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் என நம்புகிறோம். விசாரணை நிறைவுற்றாலும் ஆணையத்தின் முன் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களைத் தொகுக்க சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1,516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டிருக்கின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism