Published:Updated:

கோகுல்ராஜ் கொலை வழக்கு: `தண்டனையை ரத்து செய்க’ - யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மேல்முறையீடு!

கோகுல்ராஜ் கொலை வழக்கு

தண்டனை அளிக்கப்பட்டவுடனே சிறையில் அடைக்கப்பட்ட 10 பேரும் தற்போது தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: `தண்டனையை ரத்து செய்க’ - யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மேல்முறையீடு!

தண்டனை அளிக்கப்பட்டவுடனே சிறையில் அடைக்கப்பட்ட 10 பேரும் தற்போது தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Published:Updated:
கோகுல்ராஜ் கொலை வழக்கு

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாகும்வரை ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், சிபிசிஐடி-யும், கோகுல்ராஜின் தாயாரும் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுவராஜ்
யுவராஜ்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல்ராஜ், தங்கள் சமூகத்து பெண்ணைக் காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவரை கடத்திச் சென்று ஆணவக்கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு கடந்த 8-ம் தேதி மதுரையிலுள்ள தீண்டாமை வன்கொடுமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டுவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வழக்கில் சிசிடிவி பதிவின் உண்மைத்தன்மை, தடய அறிவியல்துறையின் அறிக்கை, உடற்கூராய்வு அறிக்கை அனைத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமில்லாமல் அமைந்தன.

கோகுல்ராஜ் தாயார் சித்ரா
கோகுல்ராஜ் தாயார் சித்ரா

அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகனின் சிறப்பான வாதம், சான்றாவணங்கள், பல முன்னோட்ட வழக்குகளின் தீர்ப்புகள் எனப் பல அம்சங்கள் இந்த வழக்குக்கு உதவி செய்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்டனை அளிக்கப்பட்டவுடனே சிறையில் அடைக்கப்பட்ட 10 பேரும் தற்போது தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

யுவராஜ்
யுவராஜ்

அதில், "சிசிடிவி காட்சிகள், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்ததை அடிப்படையாகக்கொண்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், அதைக் கருத்தில்கொண்டு கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கவும் வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று விசாரணைக்கு வந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி-யும் கோகுல்ராஜின் தாயார் சித்ராவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல்11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சாகும்வரை ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism