Published:Updated:

நகைக்காக சிறுமி கொலை, ஆயுள்தண்டனை பெற்ற பெண் விடுதலை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர் நீதிமன்றம்

பள்ளியிலிருந்து வீடு திரும்பாத நவநீதப்ரியாவை பள்ளி உட்பட ஊர் முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை, குழந்தை அருகே உள்ள திறந்த தண்ணீர்த்தொட்டியில் மிதந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

நகைக்காக சிறுமி கொலை, ஆயுள்தண்டனை பெற்ற பெண் விடுதலை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளியிலிருந்து வீடு திரும்பாத நவநீதப்ரியாவை பள்ளி உட்பட ஊர் முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை, குழந்தை அருகே உள்ள திறந்த தண்ணீர்த்தொட்டியில் மிதந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

Published:Updated:
மதுரை உயர் நீதிமன்றம்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர் முருகன். தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் இவருக்கு பூமா என்ற மனைவியும், நவநீதப்ரியா என்ற 9 வயதுப் பெண் குழந்தையும், நவநீதன் என்ற 8 வயது ஆண் குழந்தையும் இருந்தனர்.

Violence Against Child (Representational image)
Violence Against Child (Representational image)

இந்நிலையில் கடந்த 2007-ல் நவநீதப்ரியாவும், நவநீதனும் வழக்கம்போல தேவாரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்றனர். ஆனால், மாலை வீடு திரும்பும்போது நவநீதன் மட்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு திரும்பாத நவநீதப்ரியாவை பள்ளி உட்பட ஊரில் அனைத்துப் பகுதிகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை அருகே உள்ள திறந்த தண்ணீர்த்தொட்டியில் குழந்தை மிதந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் அதேபகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியம்மாளை சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்தனர். அவருடைய கணவர் இறந்துவிட வேறு நபருடன் தொடர்பில் இருந்தார் சுந்தரபாண்டியம்மாள். பணத்துக்காகக் குழந்தையின் காது, கழுத்தில் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கிறார் எனப் போலீஸார் அவர் மீதும், அவருடன் தொடர்பில் இருந்த பாபு என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்

இதையடுத்து கீழமை நீதிமன்றத்தில் பாபு விடுதலையானார். ஆனால், நகைக்காக சிறுமியைக் கொலை செய்ததாகக் கடந்த 2007-ம் ஆண்டு கைதான சுந்தரபாண்டியம்மாளுக்கு ஆயுள்தண்டனை விதித்து 2010-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த சுந்தரபாண்டியம்மாள் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 2020-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார்.

போலீஸார் தரப்பில், `குற்றம்சாட்டப்பட்டவர் சம்பவம் நடந்த அன்று வீட்டைக் கழுவி சுத்தம் செய்தார். இரவில் தண்ணீர் பிடித்தார். அவர் வீட்டில் பள்ளிச் சீருடைகள் கிடைத்தன. மரத்தடியில் நகைகள் கிடைத்தன’ உள்ளிட்ட விஷயங்களைக் கூறி சாட்சியங்களும் அளிக்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் ஊர்க்காரர்கள் குழந்தையைப் பார்த்ததாகவும், குழந்தையின் நகை அடகுக் கடையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாரஷ், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். முடிவில், `இந்த வழக்கின் சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளன. கொலையுண்ட குழந்தை, காணாமல் போன நாளன்று மனுதாரர் சுந்தரபாண்டியம்மாளுடன் பார்த்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் குழந்தை காணாமல்போன அன்று கிராமத்தினர் அதுபற்றித் தெரிவிக்கவில்லை. அரசு தரப்பு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை பெறும்படியாக இல்லை. எனவே, சுந்தரபாண்டியம்மாள் விடுதலை செய்யப்படுகிறார்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.