Published:Updated:

`’இனி மது குடிக்க மாட்டோம்’ ; உறுதியளித்தால் ஜாமீன்!' - கவனம் ஈர்த்த உயர் நீதிமன்ற உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மது குடித்ததால் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் ஜாமீன் பெற வேண்டி தாக்கல் செய்த வழக்கில் நீதிபதியின் உத்தரவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் பாரில் மது குடித்துவிட்டு தங்களுக்குள் பாட்டிலால் தாக்கிக்கொண்ட சம்பவத்தில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த திருச்சி காவல்துறை, அவர்களைச் சிறையில் அடைத்தது.

மது
மது
Representational Image

இந்தநிலையில், திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ``நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய்த் தகராறு ஏற்பட்டதால் பீர் பாட்டிலால் சுரேஷைத் தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆந்திரா: இழப்பீடு விவகாரத்தில் மெத்தனம்! - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்

இது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ``மது அருந்தியதன் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, மனுதாரர்கள் இருவரும் `இனிமேல் குடிக்க மாட்டோம்’ என சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குகிறோம்” எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து யோசித்து கூறுமாறு சொல்லி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மது குடித்ததால் ஏற்பட்ட வழக்கில் ஜாமீன் பெற வேண்டி தாக்கல் செய்த வழக்கில் நீதிபதியின் உத்தரவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு