Published:Updated:

`கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமாகாது!' - மும்பை நீதிமன்றம் கருத்து

கோர்ட்

கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் இயக்கைக்கு மாறான பாலியல் குற்றமாக கருத முடியாது என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

`கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமாகாது!' - மும்பை நீதிமன்றம் கருத்து

கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் இயக்கைக்கு மாறான பாலியல் குற்றமாக கருத முடியாது என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
கோர்ட்

மும்பையைச் சேர்ந்த முக்தார் ஷேக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் மீது 377-வது சட்டப்பிரிவு மற்றும் சிறுவர் பாலியல் குற்றத்தடுப்புச் சட்டத்தின் 8 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 377-வது சட்டப்பிரிவு இயற்கைக்கு மாறான பாலியல் குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை மேற்குப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி இருக்கிறான். அதில் அதிக அளவில் பணத்தை இழந்துவிட்டான். உடனே தனது வீட்டிலிருந்து பணத்தை எடுத்துச்சென்று முக்தார் என்பவரிடம் கொடுத்து மொபைல் ஆப்-ல் ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டார். அப்போது அந்த சிறுவனுக்கு முக்தார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டில் பணத்தை காணவில்லை என்று கூறி அவர் பெற்றோர் சிறுவனிடம் விசாரித்த போதுதான், சிறுவன் ரீசார்ஜ் செய்ய சென்ற இடத்தில் முக்தார் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தை முக்தார் மீது போலீஸில் புகார் செய்தார்.

போக்சோ
போக்சோ

அதன் அடிப்படையில் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் முக்தார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அனுஜா முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்து நீதிபதி, ``பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலம் மற்றும் முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்ததில், சிறுவனின் மர்ம உறுப்பை மனுதாரர் தொட்டிருக்கிறார். அதோடு உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். 377-வது சட்டப்பிரிவை இதில் பயன்படுத்த எந்த வித முகாந்திரமும் இல்லை. கட்டிப்பிடிப்பது மற்றும் முத்தம் கொடுப்பது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமாக கருதமுடியாது. முதல் தகவல் அறிக்கையை தவிர 377-வது சட்டப்பிரிவை உறுதிபடுத்த என்ன ஆதாரத்தை தாக்கல் செய்துள்ளீர்கள்" என் நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, ``பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ அறிக்கையும் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் இல்லை. அதனால், போஸ்சோ சட்டத்தின் 8,12-வது பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 5 வருடம் தண்டனை கொடுக்க முடியும்" என்று கூறிய நீதிபதி மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism