Published:Updated:

`இரு பெண்கள் விரும்பினால் இணைந்து வாழலாம்!' - ம.பி. உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சித்தரிப்பு படம்

`இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்துள்ளனர். அவர்களால் தனித்து வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்’

`இரு பெண்கள் விரும்பினால் இணைந்து வாழலாம்!' - ம.பி. உயர் நீதிமன்றம் தீர்ப்பு

`இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்துள்ளனர். அவர்களால் தனித்து வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்’

Published:Updated:
சித்தரிப்பு படம்

சமீப காலமாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்வது மற்றும் திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு சட்டரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் விரும்பிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்த 18 வயது பெண் தனது பால்ய தோழியான 22 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகளை தங்களுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்று கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தந்தை, `இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்துள்ளனர். அவர்களால் தனித்து வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். என் மகளிடம் குடும்பத்தோடு வந்து தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

`இரு பெண்கள் விரும்பினால் இணைந்து வாழலாம்!' - ம.பி. உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆனால், தோழியுடன்தான் இருப்பேன் என்று திட்டவட்டமாக என் மகள் தெரிவித்துவிட்டார்’ என்று தெரிவிள்ளார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் சம்பந்தபட்ட பெண் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

கோர்ட்டில் ஆஜரான பெண்ணிடம், நீதிபதிகள் விசாரித்தனர். அவர் தனது குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வது குறித்து முடிவு எடுக்க ஒரு மணி நேரம் அவகாசமும் கொடுத்தனர். ஆனால் அப்பெண், தன் தோழியுடன் சேர்ந்து வாழ தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள், `சம்பந்தப்பட்ட பெண் ஒரு மேஜர். உங்கள் வாழ்க்கை குறித்து நீங்கள் சொந்தமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்து, இரு பெண்கள் சேர்ந்து வாழ விரும்பினால் வாழலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.