சாத்தான்குளம் போலீஸார்மீதான இரட்டைக் கொலை விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி விசாரணை வேகம் பிடித்திருந்த நிலையில், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ வசம் ஒப்படைத்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் ஐ.நா வரை சென்று சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

ஐ.நா சபையின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா-வின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் தொடர்பான விசாரணை முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் இது போன்ற மரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா சபை வரை குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பதால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுகிறது. அதனாலேயே, `நேர்மையானவர்’ என்று பெயரெடுத்த கூடுதல் எஸ்.பி-யான விஜய்குமார் சுக்லா தலைமையில் சி.பி.ஐ குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் இதுவரை நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களை யெல்லாம் ஜூலை 10-ம் தேதி அறிக்கையாக சி.பி.ஐ வசம் கொடுத்திருக்கிறார்கள். ஆவணங்கள் மற்றும் சி.சி.டி.வி பதிவுகளும் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நெல்லை சுற்றுலா மாளிகையில் தற்காலிக அலுவலகம் அமைத்துள்ள சி.பி.ஐ அதிகாரிகள், ஜூலை 11-ம் தேதி காலை சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை யைத் தொடங்கினர். மதிய உணவுக்குக்கூட வெளியே செல்லவில்லை. ஹோட்டலிருந்து வீட்டுக்கே பார்சல் உணவு சென்றது. ஏழு மணி நேரம் விசாரணை நீடித்தது.

“இந்த வழக்கில் உண்மையைக் கண்டு பிடிக்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் தயங்காமல் எங்களிடம் சொல்லுங்கள். நீங்கள் கொடுக்கும் தகவல்கள் விசாரணைக்கு உறுதுணையாக இருக்கும்” என்று விஜய்குமார் சுக்லா தெரிவித்த பிறகே ஜெயராஜ் குடும்பத்தினர் அனைவரும் நம்பிக்கையுடன் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

விசாரணையின்போது, ஜெயராஜின் மனைவி செல்வராணி உட்பட குடும்பத்தினர் பலரும் கதறி அழுதிருக்கின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்தி தகவல்களைப் பெற்றது சி.பி.ஐ குழு. ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி மற்றும் அவரின் குழந்தைகளுக்கு அம்மை போட்டிருந்தது. அம்மை போட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் அறைக்குள் இருந்தபடியே பதில் சொல்லியிருக்கிறார் பெர்சி.

ஒரு கட்டத்தில், “போலீஸ் ஸ்டேஷனை பூட்டிக் கொண்டு அடிக்கும் அளவுக்கு எங்கப்பாவும் தம்பியும் அப்படி என்ன சார் தப்பு பண்ணினாங்க... அவங்களுக்கு காயம் இருந்தது தெரியாமல் டாக்டர் எப்படி உடல் தகுதிச் சான்று கொடுத்தார், மாஜிஸ்ட்ரேட் எதுவுமே கேட்காமல் எப்படி ரிமாண்ட் செய்தார்?” என்று குமுறலுடன் பெர்சி கேட்ட கேள்விகளை சி.பி.ஐ குழு கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கிடைத்த தகவல்கள், தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ அதிகாரிகள் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார்கள்.

தொடர்ந்து சி.பி.ஐ குழுவினர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல்நிலையம், ஜெயராஜின் செல்போன் கடை, நீதிமன்றம் ஆகிய இடங்களை அடுத்தடுத்து ஆய்வு செய்தனர். காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்ட தாகக் கூறப்படும் அறை, மாடியில் இருக்கும் அறை ஆகியவற்றைப் பார்வையிட்டனர். லத்தி, மேஜை, பாத்ரூம், சுவர்கள், லாக்அப் அறை உள்ளிட்ட 18 இடங்களில் ரத்தக்கறை இருந்ததாக சி.பி.சி.ஐ.டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த இடங்களையெல்லாம் சி.பி.ஐ குழுவினர் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பதற்கு முன்பாக அவர்கள் அலைக்கழிக்கப்பட்ட இடங்களான காவல்நிலையம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் ஆகிய இடங்களில் உடன் இருந்தவர் ஜெயராஜின் தங்கை கணவர் ஜோசப். எனவே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்ற வளாகங்களுக்கு எப்படி அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதையும், வெளியே வரும்போது எப்படி நடந்து வந்தார்கள் என்பதையும் ஜோசப் நடித்துக் காட்டினார். அதையெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டது சி.பி.ஐ.

தொடர்ந்து சி.பி.ஐ குழுவினர் கோவில்பட்டி சிறைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் சரவணன், மருத்துவர் வினிலா, சிறைத்துறை அதிகாரிகள், சாத்தான்குளம் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ், கொரோனா தன்னார்வலர்கள் எனப் பலரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

சி.பி.ஐமீது ஜெயராஜ் குடும்பத்தினருக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. “ஒரு வீட்ல ஒரு உசுரு போனாலே தாங்க முடியாது. நாங்க இரண்டு உசுரை இழந்து நிக்குறோம். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையில் எங்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கு” என்றார் பெர்சி.

பெர்சி மட்டுமல்ல... அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதான்!

19.06.2020: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவர்மீதும் அங்குள்ள காவல்நிலையத்தில் 312/2020 என்ற வழக்கை 188, 269, 294(b), 353, 506(ii) IPC ஆகிய ஐந்து பிரிவுகளில் போலீஸார் பதிவு செய்து ஜூன் 20-ம் தேதி சிறையில் அடைத்தனர்.

23.06.2020: கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 649/2020, 650/2020 என்ற குற்ற வழக்கு 176 (1)A என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டது. இந்த மரணம் குறித்து கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணையைத் தொடங்கினார்.

01.07.2020: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். சி.பி.ஐ விசாரணைக்கு முன்பாக சாட்சியங்கள் அழிக்கப் படலாம் என்பதால் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 01/2020, 02/2020 என இரு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி., அதே வேகத்தில் எஸ்.ஐ ரகு கணேஷைக் கைது செய்தது.

02.07.2020: அதிகாலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் கைது செய்யப்பட்டு பேரூரணி யிலுள்ள தூத்துக்குடி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

03.07.2020: தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் மீதும் Cr.No. 01/2020 u/s 176(1)(A)(i) Crpc மற்றும் 342,302,201 IPC என்ற வழக்கும் Cr.No. 02/2020 u/s 176(1)(A)(i) Crpc மற்றும் 342,302,201 IPC பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

08.07.2020: சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் என மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது 302, 201, 342, 107 IPC பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

07.07.2020:  ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 649/ 2020, 650/2020 அடிப்படையில் 176 (1) A பிரிவின்கீழ் சி.பி.ஐ (RC.0502020S0009) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

12.07.2020: சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 5 பேரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி கிளைச்சிறையில் என்ன நடந்தது என்பது குறித்து மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் மூன்றாவது முறையாகச் சிறைக்குச் சென்று ஆய்வு செய்தார். ஜூலை 12-ம் தேதி அவர் மூன்று மணி நேரம் நடத்திய விசாரணையின்போது ‘ரத்தக் காயத்துடன் வந்த இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல், சிறைக்குள் எப்படி அனுமதித்தீர்கள்?’ என்று சிறைக் காவலர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் உடல்நலம் மோசமாகி, இரவு முழுவதும் தூங்காமல் கதறியதையும் கைதிகள் சிலர் பாரதிதாசனிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘உடல்நிலை சரியில்லாத இருவரையும் 100 மீட்டர் தொலைவிலிருக்கும் மருத்துவமனைக்குக்கூட அழைத்துச் செல்லாதது ஏன்?’ என்று மீண்டும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளைக் கேட்டிருக்கிறார் பாரதிதாசன்.

அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் ஒன்பது பேரில் பலரும் தங்களுக்குத் தெரிந்த உண்மைகளையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அவையெல்லாம் தட்டச்சர் மூலம் ஸ்பாட்டிலேயே பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது. மேலும், சிறைச்சாலையின் வாயிலில் சி.சி.டி.வி கேமரா இல்லாததன் மர்மம் பற்றியும் குறிப்பில் பதிவிட்டுள்ளார் பாரதிதாசன்.