Published:Updated:

நீதித்துறையில் மறுமலர்ச்சிகளை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்... ஏன்? - கே.சந்துரு பார்வை

நீதித்துறை
நீதித்துறை

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகனுக்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நீதி கேட்க முடிகின்ற வாய்ப்பு நம் நாட்டில் உள்ளது.

2020 புத்தாண்டுக்கான புதிய ஆட்டம் தொடங்கிவிட்டது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று கூறினாலும் 2019-ம் ஆண்டில் நீதித் துறையில் நடந்த செயல்பாடுகளை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது நல்லது. ஏனெனில், அவை எல்லாம் நீதித்துறை வரலாற்றிலேயே நிகழாதவை!

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரண்டு தலைமை நீதிபதிகளைக் கண்டது. மேனாள் தலைமை நீதிபதி கோகாய், குறுகிய காலமே பதவி வகித்தார் என்றாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன்பே மூன்று நீதிபதிகளுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பகிரங்க பேட்டியளித்ததன் மூலம் அனைவரையும் திகைக்கவைத்தார்.

அந்த நான்கு நீதிபதிகளும் தங்கள் வீட்டுப் புல்வெளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை; ஒளிவு மறைவற்ற செயல்பாடுகளே நீதித்துறையின் மாண்பைக் காக்கும்' என்றார்கள். மேலும், 'நீதிபதிகளுக்கு ஒதுக்கப் படும் வழக்குகள் பட்டியலில் சார்புத் தன்மை இருக்கிறது. எனவே, தலைமை நீதிபதி மட்டுமே வழக்கின் இறுதி முடிவை உறுதி செய்ய முடியும்' என்றார்கள்.

இவர்கள் இப்படி எல்லாம் பேசியதால், நீதிபதி கோகாய் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு நீதித்துறையில் வியக்கத்தகு மறுமலர்ச்சிகள் ஏற்படலாம் என்று நினைத்தவர்களுக்கு கிடைத்ததென்னவோ பெருத்த ஏமாற்றமே!

...குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய டெல்லி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது அவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், 'போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என்றால், நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரிக்காது' என்று ஒரு புதிய குண்டையும் தூக்கிப்போட்டார் பாப்டே.

நீதித்துறையில் மறுமலர்ச்சிகளை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்... ஏன்? - கே.சந்துரு பார்வை

அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினரை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறி, மக்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Rsikme

டெல்லி உயர்நீதிமன்றமோ அந்த வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க மறுத்ததுடன், பிப்ரவரி மாதத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தது. அவசர சிகிச்சைக்குக்கூட காத்திருப்பை தேவையாக்கிவிட்ட நீதிபதிகள், தாங்களே அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற நினைவையே இழந்துவிட்டனர்...

சமீபத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்தது.

'மத்திய புலனாய்வுத் துறையின் சீலிடப்பட்ட உறைகளிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் அமையக் கூடாது' என்று அறிவுறுத்தியது. ஆனால், தலைமை நீதிபதி கோகாய் பல வழக்குகளில், அரசுத் தரப்பில் அளிக்கப்படும் சீலிடப்பட்ட உறைகளிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுத்ததை மறக்க முடியாது. குறிப்பாக, ரஃபேல் விமானம் வாங்கிய விவகாரத்திலும் அவர் அவ்வாறு தீர்ப்பளித்தது பொதுவெளிகளில் விமர்சனத்துக்கு உள்ளானது.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகனுக்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நீதி கேட்க முடிகின்ற வாய்ப்பு நம் நாட்டில் உள்ளது. ஆனால், 2019-ல் ஆண்டில், இத்தகைய அதிகாரம் பெற்ற அந்த உச்ச நீதிமன்றம் 'அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்' என்ற தனது அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டதா என்று கேட்டால்... அதற்கான பதில் ஏமாற்றத்தையே அளிக்கும். 2020-ம் ஆண்டில் மாற்றம் காணுமா இந்த நீதித்துறை?

நீதித்துறையில் மறுமலர்ச்சிகளை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்... ஏன்? - கே.சந்துரு பார்வை

- பாலியல் புகாரில் தலைமை நீதிபதி, அக்கறை காட்டப்படாத காஷ்மீர் விவகாரம், ராமர் கோயில், கேள்விக்குறியான நீதி, சபரி மலை... பாதுகாப்பு மறுப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டம்... குழப்பமோ குழப்பம், நீதிபதிகள் நியமனம்... பரம ரகசியம்... இந்தத் தலைப்புகளில் விரிவான பார்வையை உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு எழுதியுள்ள சிறப்பு அலசல் கட்டுரையை ஜூ.வி 2020 சிறப்பிதழில் முழுமையாக வாசிக்க > 2019-ல் நீதி மேயாத மான் - அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் இல்லையா உச்ச நீதிமன்றம்? https://www.vikatan.com/social-affairs/judiciary/supreme-court-activities-of-2019

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு