Published:Updated:

கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள்; 3-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு!

கொலை செய்யப்பட்டவர்கள்

தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் குறித்த முழுமையான தீர்ப்பு வருகின்ற 3-ம் தேதி வழங்கப்படவிருக்கிறது.

கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள்; 3-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் குறித்த முழுமையான தீர்ப்பு வருகின்ற 3-ம் தேதி வழங்கப்படவிருக்கிறது.

Published:Updated:
கொலை செய்யப்பட்டவர்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஊருக்குள் புகுந்த கும்பல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலைசெய்யப்பட்டனர்.

கச்சநத்தம்
கச்சநத்தம்

பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தப் படுகொலைச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கில் சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.

குற்றவாளிகள் நீதிமன்றம் வந்தபோது
குற்றவாளிகள் நீதிமன்றம் வந்தபோது

சிவகங்கை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று மாலை நீதிபதி முத்துக்குமரன் இவ்வழக்கில் 27 பேர் குற்றாவாளிகள் என அறிவித்தார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை (3-ம் தேதி) வழங்கப்படுவதாக அறிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

இந்தத் தீர்ப்பை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.