Published:Updated:

புதுக்கோட்டை: இடையூறாக இருந்த மனைவி கொலை; மகளுக்கு பாலியல் தொல்லை! - கொடூர தந்தைக்கு மரண தண்டனை

குற்றவாளி முருகேசன்
குற்றவாளி முருகேசன்

சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ய மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனையும், 1 லட்சம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், மேலும் 1லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னைதிரையன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(54). இவருக்கு மூன்று மனைவிகள். 11 மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மனைவி பானுமதி ஆடு மேய்க்கச் சென்ற போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த கணேஷ் நகர் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பானுமதியின், 17 வயது மகளை, மகள் என்றும் பாராமல் முருகேசன், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் பானுமதியைக் கொன்றுவிடுவேன் என்று கூறி மிரட்டியும் இருக்கிறார்.

இதுபற்றி பானுமதிக்குத் தெரியவர முருகேசனைத் தட்டிக்கேட்டுள்ளார். அதோடு, வீட்டிற்குள்ளே விடாமல் துரத்தி அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகேசன் தன் ஆசைக்குக் குறுக்கே நிற்கும் மனைவி பானுமதியைத் தீர்த்துக்கட்டியுள்ளார்.

புதுக்கோட்டை: இடையூறாக இருந்த மனைவி கொலை; மகளுக்கு பாலியல் தொல்லை! -  கொடூர தந்தைக்கு மரண தண்டனை

இதுகுறித்து முருகேசன் மீது போக்சோ, கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்த போலீஸார் முருகேசனைக் கைது செய்தனர். கடந்த 2019ல் நடந்த இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, சொந்த மகளை வன்கொடுமை செய்ய மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனையும், 1 லட்சம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், மேலும் 1 லட்சம் அபராதமும் விதித்தார்.

மேலும் 9 வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனையையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 6 மாதங்களில் 3 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு