Published:Updated:

அரசுத் தரப்பு சாட்சி விசாரணை நிறைவு! - கொடநாடு கொலை வழக்கின் அடுத்தகட்டம் என்ன?

சாட்சிகள் விசாரணை
சாட்சிகள் விசாரணை

இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பு சாட்சி விசாரணையில் 41 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அரசுத் தரப்பு சாட்சி விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

குற்றம் நடந்த 147 நாள்களில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 2-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்கு விசாரணையில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இந்த வழக்கை 90 நாள்களுக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம், 21-ம் தேதி முதல் மீண்டும் வேகமெடுத்தது.

சாட்சிகள் விசாரணை
சாட்சிகள் விசாரணை

இந்த வழக்கில் 103 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 40 பேரிடம் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 9, 11 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோத்தகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த வழக்கு விசாரணை அதிகாரி பாலசுந்தரம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கோவைச் சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆஜரானார்கள். ஜாமினிலுள்ள ஏழு பேர் ஆஜரானார்கள். ஜம்சீர் அலி ஆஜராகவில்லை.

மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதுவரை அரசுத் தரப்பு சாட்சி விசாரணையில் 41 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அரசுத் தரப்பு சாட்சி விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வழக்கை வரும் 23-ம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.

அரசு வழக்கறிஞர் பாலநந்தகுமார்
அரசு வழக்கறிஞர் பாலநந்தகுமார்

இது குறித்து அரசு வழக்கறிஞர் பாலநந்தகுமார்,``கொடநாடு வழக்கை மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. அரசுத் தரப்பில் இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 41-வது அரசு சாட்சியாக விசாரணை அதிகாரி நேரில் ஆஜரானார். இத்துடன் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிவடைந்துவிட்டது" என்றார்.

கொடநாடு: `கருணைக் கொலைகூட செய்துவிடுங்கள்; அரசியல் வேண்டாம்!’- நீதிமன்றத்தில் சயான் ஆவேசம்

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆனந்த், விஜயன் ஆகியோர் கூறுகையில்,``அரசுத் தரப்பில் பட்டியலிடப்பட்ட 103 சாட்சிகளில் 41 சாட்சிகள் மட்டுமே தங்கள் தரப்பு சாட்சிகள் என உறுதிப்படுத்தி, முடிவில் விசாரணை அதிகாரி சாட்சியுடன் விசாரணை முடிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் தரப்பில் விடுபட்ட கேள்விகளை எழுப்பவும், பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் 19 சாட்சிகளை மறு விசாரணை செய்ய மனு செய்திருக்கிறோம்.

வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்கள்

அரசுத் தரப்பில் தவிர்த்த சாட்சிகளை, எதிர்த்தரப்பு சாட்சிகளாக விசாரிக்கவிருக்கிறோம். அதில் யாருமே எதிர்பார்க்காத முக்கிய பிரமுகர்களும் அடங்குவார்கள்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு