Election bannerElection banner
Published:Updated:

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யா சொல்வது என்ன?

கவுசல்யா
கவுசல்யா

`உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்' என்கிறார் கவுசல்யா.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது, திருப்பூர் மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்.

உடுமலை சங்கர், கவுசல்யா
உடுமலை சங்கர், கவுசல்யா

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே நேரத்தில், வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கக்கோரி காவல்துறை சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது.

Vikatan

மேலும், 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரின் விடுதலை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவுசல்யா
கவுசல்யா

இந்தத் தீர்ப்பு குறித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் பேசிய சங்கரின் மனைவி கவுசல்யா, ``சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. திருப்பூரில் வழக்கு நடந்தபோது அனைத்து விவரங்களும் எனக்குத் தெரியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது எதுவும் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் டி.எஸ்.பி-யும் மாற்றப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களால் வக்கீல் வைக்க முடியவில்லை. அரசு மூலமாகவே செல்ல முடிந்தது. இப்போது சங்கர் உயிரோடு இல்லை. பிறகு எப்படி அன்னலட்சுமியும் சின்னசாமியும் குற்றவாளிகளாக இல்லாமல் இருப்பார்கள்?

கவுசல்யா
கவுசல்யா

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லவுள்ளோம். இந்த வழக்கில் என்னுடைய சட்டப்போராட்டம் தொடரும்"என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு