Published:Updated:

பெற்றோரை இழந்த குழந்தைக்கு தாத்தா, பாட்டி நிரந்தர காப்பாளர்களா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

தாத்தா, பாட்டி

வயது, வருமானம் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்கப் போதுமான தகுதிகளாக இருக்க முடியாது; தாத்தா, பாட்டிதான் காப்பாளர்கள் என தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியை காப்பாளர்களாக நிர்ணயிப்பது பற்றி, வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தியிடம் கேட்டோம்.

பெற்றோரை இழந்த குழந்தைக்கு தாத்தா, பாட்டி நிரந்தர காப்பாளர்களா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?

வயது, வருமானம் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்கப் போதுமான தகுதிகளாக இருக்க முடியாது; தாத்தா, பாட்டிதான் காப்பாளர்கள் என தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியை காப்பாளர்களாக நிர்ணயிப்பது பற்றி, வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தியிடம் கேட்டோம்.

Published:Updated:
தாத்தா, பாட்டி

கோவிட் இரண்டாவது அலையின் போது பெற்றோரை இழந்த 6 வயது குழந்தைக்கு, தாய்வழி உறவான அத்தைதான் காப்பாளர் என குஜராத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. 71 மற்றும் 63 வயதுடைய தாத்தா- பாட்டியின் முதுமையைக் காரணம் காட்டியும், வருமானம் அதிகமாக இருப்பதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள, அத்தை மிகவும் பொருத்தமானவர் என்று கருதியும், குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

பெற்றோர் - சித்திரிப்பு படம்
பெற்றோர் - சித்திரிப்பு படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயது, வருமானம் மட்டுமே ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான போதுமான தகுதிகளாக இருக்க முடியாது எனக்கூறி தாத்தா,பாட்டி தான் காப்பாளர்கள் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை முன்வைத்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியை காப்பாளர்களாக நிர்ணயிப்பது பற்றி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தியிடம் கேட்டோம்:

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஒரு குழந்தைக்குப் பெற்றோர்தான் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காப்பாளர்கள். விதி வசத்தால் பெற்றோர் இல்லாத சூழ்நிலை ஒரு குழந்தைக்கு ஏற்படலாம். பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமோ, சமரச மன்றத்தின் மூலமோ முடிவு செய்து கொள்வார்கள்.

வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தி
வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தி

பெற்றோரின் பராமரிப்பு கிடைக்காத சூழலில், ஆதரவற்ற குழந்தைகள் என்றால், அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும். அதே சமயத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உற்றார் உறவினர் இருக்கும் நிலையில், யார் அவர்களுக்குக் காப்பாளர்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. தாத்தா, பாட்டி காப்பாளர்களாக இருப்பது சிறப்பு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எல்லா நிலைகளிலும் அவர்கள் பொருத்தமான காப்பாளர்களாக இருப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணமாக, கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர், ஆரம்பத்தில் இருந்தே தாத்தா, பாட்டி எதிர்ப்பை தெரிவித்தனர் என்றால், பேரக்குழந்தைகள் மீது அன்பு செலுத்துவார்களா என்பது கேள்விக்குறி. மேற்குறிப்பிட்ட வழக்கில் தாத்தா, பாட்டி சிறந்த காப்பாளர்களாக இருக்கலாம். ஆனால் எல்லா வழக்கிலும் இதையே பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாது.

குழந்தை - சித்திரிப்பு படம்
குழந்தை - சித்திரிப்பு படம்

இத்தகைய நிலையில், ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்துதான் குழந்தையின் காப்பாளர் தாத்தா, பாட்டியா, சித்தி, சித்தப்பாவா இல்லை மாமா, அத்தையா என முடிவெடுக்க முடியும். குழந்தையின் வயது, தாத்தா, பாட்டியின் வயது, குழந்தைகளைப் பார்த்துப் பராமரித்து, படிக்க வைத்து அவர்களுடைய எதிர்காலத்தைச் சரியாகக் கொண்டு செல்லும் நிலையில் உள்ளார்களா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தையின் அதிகப்படியான நலனை மனதில் நிறுத்தி குழந்தைக்குச் சிறந்த காப்பாளர் யார் என்பதை நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும்" என்று வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தி கூறினார்.

- சுபா ஆறுமுகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism