Published:Updated:

`உடல் பாகங்களை விற்கிறார்களாம்; மகனைக் கண்டுபிடித்து தாருங்கள்!’ - அதிரடி காட்டிய நீதிமன்றம்

சிறுவனைக் கண்டுபிடித்து தரக் கோரிய வழக்கை மேலூர் போலீசாரிடமிருந்து திரும்பப் பெற்று மதுரை சி.பி.சி.ஐ.,டி (ஓசியூ) டி.எஸ்.பி., விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

hc madurai
hc madurai

மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த நாங்கள் மேலூரில் வசித்துவருகிறோம். 14 வயதுடைய எனது மகன் சிவனேஷ் சற்று மனவளர்ச்சி குறைபாடு உடையவன்.

திருச்செந்தூரில் குடும்பத்தாருடன் சிவனேஷ்.
திருச்செந்தூரில் குடும்பத்தாருடன் சிவனேஷ்.

எனது மகனை அழகர்கோவில் அருகேயுள்ள மனநலம் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியில் சேர்த்து அவனைப் படிக்க வைத்தேன். கடந்த ஏப்ரல் மாதம் 28 -ம் தேதி காலை வீட்டருகே உள்ள கழிப்பறைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற என் மகன் சிவனேஷைக் காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சோர்வடைந்த நாங்கள் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவல்நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், இந்தப் புகாரின் அடிப்படையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது வீட்டின் அருகே நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன.

 `உடல் பாகங்களை விற்கிறார்களாம்; மகனைக் கண்டுபிடித்து தாருங்கள்!’ - அதிரடி காட்டிய நீதிமன்றம்

இங்கு சி.சி.டி.வி., கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்த்தால் கூட எனது மகன் எங்கு சென்றான், யாராவது கடத்திச் சென்றார்களா என்பது தெரியும். போதுமான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சிறுவர்களைக் கடத்தி வடமாநிலங்களில் கொத்தடிமையாக வைத்து, உடல்பாகங்களை திருடி விற்பனை செய்வதாக பரவும் தகவல் அச்சத்தை தருகிறது. எனவே, மேலூர் போலீசில் உள்ள வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.

hc madurai
hc madurai

இதை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "மேலூர் போலீசாரிடமிருந்து வழக்கை பெற்று மதுரை சி.பி.சி.ஐ.,டி (ஓசியூ) டி.எஸ்.பி., விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்தார்.