Published:Updated:

`இந்தக் குற்றத்துக்குத் தந்தைதான் காரணம்!'-உதித் சூர்யா முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக ஏற்ற நீதிபதி

``மாணவரின் வயதை கருத்தில் கொண்டு, அவரது முன்ஜாமீன் மனு, ஜாமீன் மனுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.''

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட விவகாரத்தில், மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவையே, ஜாமீன் மனுவாக ஏற்றுக்கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதித் சூர்யா
உதித் சூர்யா

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி தேனி காவல் நிலையத்தில் உதித் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. வாணியம்பாடி மாணவன் வெளிநாடு தப்பி ஓட்டம்?

இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்பதற்காகக் கடந்த மாதம் 24-ம் தேதி உதித் சூர்யா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``உதித்சூர்யா முதலில் போலீஸிடம் சரணடையட்டும்'' என்று அறிவுறுத்தி இருந்தார்.

உதித் சூர்யா
உதித் சூர்யா

ஆனால், அதற்குள் உதித் சூர்யாவையும், தந்தை டாக்டர் வெங்கடேசனையும் போலீஸ் கைது செய்தது. இந்த நிலையில் மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்திருந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``மாணவரைச் சரணடைய அறிவுறுத்தி இருந்த நிலையில், போலீஸார் கைது செய்துள்ளதால், ஜாமீன் மனுவாக ஏற்க முடியாது'' என்று தெரிவித்தார்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய நபர்... யார் இந்த `ராஜா டாக்டர்?'

``உதித் சூர்யாவும், அவர் தந்தையும் சரணடைய வரும்போதுதான் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள்'' என்று அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

அப்போது மாணவரின் வயதை விசாரித்த நீதிபதி, ``இந்தக் குற்றத்திற்கு இந்த மாணவரின் தந்தைதான் காரணம்'' என்று வேதனையை வெளிப்படுத்தியவர், ``மாணவரின் வயதைக் கருத்தில் கொண்டு, அவரது முன்ஜாமீன் மனு, ஜாமீன் மனுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது'' எனத் தெரிவித்தவர், அக்டோபர் 14-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய ஜாமீன் மனுவை நேரடியாக உயர் நீதிமன்றமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

மிரட்டிய மர்ம நபர்.. பணம் வாங்கிய ஏஜென்ட்!- நீட் வழக்கில் என்ன நடந்தது?