Published:Updated:

"யூடியூப் விளம்பரத்தால் கவனம் சிதறுகிறது" - ரூ.75 லட்சம் இழப்பீடு கேட்ட மனுதாரரை கண்டித்த நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

`யூடியூபில் வரும் விளம்பரத்தால் கவனம் சிதறி தேர்வுகளில் வெற்றிபெற முடியவில்லை’ என இழப்பீடு கேட்டு யூடியூப் நிறுவனத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தது.

"யூடியூப் விளம்பரத்தால் கவனம் சிதறுகிறது" - ரூ.75 லட்சம் இழப்பீடு கேட்ட மனுதாரரை கண்டித்த நீதிமன்றம்

`யூடியூபில் வரும் விளம்பரத்தால் கவனம் சிதறி தேர்வுகளில் வெற்றிபெற முடியவில்லை’ என இழப்பீடு கேட்டு யூடியூப் நிறுவனத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

யூடியூபில் வரும் விளம்பரத்தால் கவனம் சிதறி, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியவில்லை என இழப்பீடு கேட்டு யூடியூப் மீது மனு தாக்கல் செய்த நபரிடம், உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வியெழுப்பி அபராதம் விதித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், யூடியூபில் வரும் பாலியல் உள்ளடக்க விளம்பரத்தால் தன்னுடைய கவனம் சிதறுவதாகவும், அதனால் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியவில்லை என்றும், ரூ.75 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று கேட்டு யூடியூப் மீது மனு தாக்கல் செய்திருந்தார்.

யூடியூப்
யூடியூப்

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து விசாரணையின்போது நேரில் ஆஜரான மனுதாரரிடம் அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய நீதிமன்ற அமர்வு, ``இப்போது நீங்கள் இணையத்தில் விளம்பரங்களைப் பார்த்ததால் உங்களுக்கு நஷ்ட ஈடு தேவை. அந்த விளம்பரத்தால் உங்களின் கவனம் சிதறி, தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்று சொல்கிறீர்களா...

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

இது போன்ற மனுக்கள் நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பதாகும். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மிக மோசமான மனுக்களில் இதுவும் ஒன்று. உங்களுக்கு ஒரு விளம்பரம் பிடிக்கவில்லையென்றால் அதைப் பார்க்க வேண்டாம். வெறும் விளம்பரத்துக்காக நீதிமன்றத்தில் இது போன்ற மனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது" என எச்சரித்து ரூ.1 லட்சம் செலுத்துமாறு மனுவைத் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து மனுதாரர், தான் வேலையில்லாமல் இருப்பதாகவும், தன்னை மன்னித்து அபராதத்தை நீக்குமாறும் கோரிக்கை வைத்தார். அதையடுத்து நீதிபதிகளும், அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை, ரூ.25,000 எனக் குறைத்து உத்தரவிட்டனர்.