Election bannerElection banner
Published:Updated:

`எட்டாவது சாட்சி சொன்ன பொய்..!' -கொலை வழக்கில் அதிர்ச்சி தண்டனை கொடுத்த தேனி நீதிபதி

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்

தேனி சிறையில் இருந்த பிரசாந்த், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம், நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டார். முடிவில், பிரசாந்துக்கு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது குள்ளப்பக்கவுண்டன் பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 32) என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு, முல்லைப்பெரியாறு ஆற்றில் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தண்ணீர்த் திருடும் கும்பல் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், முல்லைப்பெரியாறு கரையில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் கோபமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 26) என்பவர், 2014 மார்ச் 7-ம் தேதி இரவு ராஜாவை கத்தியால் குத்தினார். இதில், ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

பிரசாந்த்
பிரசாந்த்
`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி வழக்கின் விசாரணைகள் முடிந்து, நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கினார்.

தேனி சிறையில் இருந்த பிரசாந்த், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம், நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டார். முடிவில், பிரசாந்துக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்

Theni Court
Theni Court

இந்த நிலையில், இவ்வழக்கின் எட்டாவது சாட்சியான குள்ளப்பக்கவுண்டன்பட்டி கள்ளர் தெருவைச் சேர்ந்த கோபி (வயது 40) என்பவர், ஏற்கெனவே கூறிய வாக்குமூலத்தை மறுத்து பொய் சாட்சி கூறியது வழக்கு விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, நேற்று, பிரசாந்துக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி அப்துல்காதர், பொய் சாட்சி கூறிய கோபிக்கு, ஒருநாள் சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு