Published:Updated:

`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

பிரசாந்த்
பிரசாந்த்

தேனியைச் சேர்ந்த கொலைக் குற்றவாளிக்கு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம், ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவர், 2014-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு ஆற்றின் கரைகளில் மின் மோட்டார் அமைத்துத் தண்ணீர் திருடும் கும்பல் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தார். அதையடுத்து அதிரடி ஆய்வில் இறங்கிய இரு துறை அதிகாரிகளும், முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் இருந்த மின்மோட்டர்களைப் பறிமுதல் செய்தனர்.

அதில், பிரசாந்த் (வயது 26) என்பவரது மின் மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், பிரசாந்துக்கும் ராஜாவுக்கும் இடையே பகை உருவானது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி இரவு, ராஜாவை, பிரசாந்த் கத்தியால் குத்தினார். இதில், ராஜா பலியானார். இச்சம்பவம் கூடலூர், கம்பம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதை வழக்குப்பதிவு செய்த கூடலூர் காவல்துறையினர், பிரசாந்தைக் கைது செய்தனர்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்
தேனி மாவட்ட அணைகள் தூர்வாருதல் எப்போது? - கேள்வி எழுப்பும் விவசாயிகள்

இந்த வழக்கின் விசாரணை, தேனி நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில், நேற்று இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக, தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தேனி மாவட்டச் சிறையில் இருந்த பிரசாந்த், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரசாந்துக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு