Published:Updated:

"முஸ்லிம் பெண்கள் 15 வயதில் திருமணம் செய்யலாம்; சட்டப்படி செல்லும்!"-பஞ்சாப்,ஹரியானா உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

``முகமதியச் சட்டத்தின் கொள்கைகள் அடிப்படையில், வயதுக்கு வந்த ஓர் இஸ்லாமியப் பெண் அல்லது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒரு இஸ்லாமியப் பெண் தனது விருப்பப்படி ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்." - நீதிமன்றம்

ஜாவேத் என்னும் 26 வயது நபர், 16 வயதான தன் மனைவியைச் சிறுவர் காப்பகத்திலிருந்து மீட்டு தன்னுடன் அனுப்பி வைக்கும்படி தொடர்ந்த வழக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியான நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தன் 16 வயது மனைவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஜாவேத் (26) என்பவர் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விகாஸ் பாஹ்லின் அமர்வு விசாரித்தது. அந்த மனுவில், திருமணத்தின்போது தன் மனைவிக்கு 16 வயது நிரம்பியிருந்ததாகவும், சிறுமியின் விருப்பத்தின் பேரிலேயே கடந்த ஜூலை 27-ம் தேதி மணி மஜ்ராவில் உள்ள மசூதியில் 'நிக்காஹ்' நடைபெற்றதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

"முஸ்லிம் பெண்கள் 15 வயதில் திருமணம் செய்யலாம்; சட்டப்படி செல்லும்!"-பஞ்சாப்,ஹரியானா உயர் நீதிமன்றம்
சித்திரிப்புப் படம்

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சிறுமியின் பொறுப்பை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த மனுவை எதிர்த்து, ``சிறுமி மைனர் என்பதால், அவர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து நீதிமன்றம், இதற்கு முன்பாக யுனஸ் கான் என்பவர் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கருத்தில் கொண்டு, ``முகமதியச் சட்டத்தின் கொள்கைகள் அடிப்படையில், வயதுக்கு வந்த ஓர் இஸ்லாமியப் பெண் அல்லது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓர் இஸ்லாமியப் பெண் தனது விருப்பப்படி ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். அது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை மீறுவதாகாது" என ஷரியா சட்டத்தை மேற்கோள்காட்டி, 16 வயது சிறுமியின் பொறுப்பை அவர் கணவரான மனுதாரரிடம் ஒப்படைக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.