Published:Updated:

`நான்தான் திருமணத்துக்கு வற்புறுத்தினேன்’ - கணவருக்கு ஆதரவாகச் சிறுமி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

நீதிமன்றம் சித்திரிப்பு படம்

மைனர் பெண்ணைத் திருமணம் செய்து தாம்பத்திய உறவு வைத்துக்கொண்ட இளைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

`நான்தான் திருமணத்துக்கு வற்புறுத்தினேன்’ - கணவருக்கு ஆதரவாகச் சிறுமி; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மைனர் பெண்ணைத் திருமணம் செய்து தாம்பத்திய உறவு வைத்துக்கொண்ட இளைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Published:Updated:
நீதிமன்றம் சித்திரிப்பு படம்

மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் (32). இவர், தான் வசித்த பகுதியில் இருந்த மைனர் பெண் ஒருவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஷேக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மைனர் பெண்ணான தங்களது மகளைக் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துவிட்டதாகப் பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். இவ்வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது 22 வயதாகிறது. 2014-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். தனது வாக்குமூலத்தில், ``பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வெளியில் சென்றபோது ஷேக் என் பின்னால் வந்தார். அங்குதான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு அடிக்கடி இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். 2014-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி ஷேக்கிடம் என்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் நான் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தினேன். எனவே, என்னை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். அப்படி சென்ற இடத்தில் திருமணம் செய்துகொண்டு தாம்பத்திய உறவும் வைத்துக்கொண்டார்.

கோர்ட் சித்திரிப்பு படம்
கோர்ட் சித்திரிப்பு படம்

ஐந்து மாதங்களுக்குப் பிறகு எங்களை போலீஸார் கண்டுபிடித்து புனேவுக்கு அழைத்துவந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ``ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்டவர், அக்குற்றத்தில் ஈடுபடத் தயாராக இல்லாமல் இருந்தார். ஆனால் இருவருக்கும் இடையிலான காதல் காரணமாகவே இருவரும் உறவில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளி ஏற்கெனவே தனது இளமையைச் சிறையில் கழித்துவிட்டார். இப்போது குற்றவாளிக்கு 32 வயதாகிறது.

குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணைத் தானாக அழைத்துச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட பெண்தான் தன்னை அழைத்துச் செல்லும்படியும், திருமணம் செய்யும்படியும் நிர்பந்தம் செய்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு குற்றவாளி பெண்ணின் வயதைப் பற்றிக் கவலைப்படாமல் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடக்கும்போது பெண்ணிற்கு 14 வயதுதான் ஆகியிருக்கிறது. எனவே இவ்விவகாரத்தில் அப்பெண் உறவுக்கு அனுமதி கொடுத்தார் என்ற வாதத்துக்கே இடமில்லை. எனவே இதை வன்கொடுமையாகவே கருத முடியும்” என்று நீதிபதி தெரிவித்ததோடு, குற்றவாளிக்கு 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism