Published:Updated:

நீலகிரி: தீர்ப்பு நேரத்தில் மாயமான குற்றம்சாட்டப்பட்டவர்! - தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி

மகிளா நீதிமன்றம், ஊட்டி
மகிளா நீதிமன்றம், ஊட்டி

தீர்ப்பு வழங்கும் நேரத்தில் நீதிமன்ற வளாகத்திலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர் மாயமானதால், தீர்ப்பை ஒரு நாள் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் ஊட்டியில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள எடப்பள்ளி பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஊட்டியிலுள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்தக் கொலை வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருருந்தது.

மகிளா நீதிமன்றம், ஊட்டி
மகிளா நீதிமன்றம், ஊட்டி

நீதிபதி குலசேகரன், பிற்பகல் தீர்ப்பு வழங்கத் தயாரானார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் திடீரென மாயமானார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுனர். தொடர்ந்து பல மணி நேரம் தேடி ஒருவழியாக அந்த நபரைக் கண்டுபிடித்தனர்.

நீலகிரி: `கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி முடித்த முதல் மாவட்டம்!’ - நம்பிக்கை பகிரும் கலெக்டர்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ``எடப்பள்ளி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான பென்னி என்ற நபருக்கு, அவரின் மனைவி அந்தோணியம்மாள் (50) நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டுவந்த பென்னி, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி தனது மகள் வீட்டுக்குச் சென்ற அந்தோணியம்மாளை நான்சச் எஸ்டேட் பகுதியில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்துக் குத்தியதில், அந்தோணியம்மாள் உயிரிழந்தார்.

மகிளா நீதிமன்றம், ஊட்டி
மகிளா நீதிமன்றம், ஊட்டி

இது குறித்து கொலக்கொம்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பென்னியைக் கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்ததுவந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (நேற்று) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, பென்னியை போலீஸார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். நீதிபதி பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அதற்குள், பென்னி கோர்ட்டிலிருந்து மாயமானார். இதனால், தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், கோர்ட்டிலிருந்து தப்பிய பென்னியை வண்டிச்சோலை பகுதியில் போலீஸார் பிடித்தனர். குற்றவாளி மாயமானதால், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (இன்று 15-09-2021) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு