Published:Updated:

நிச்சயிக்கப்பட்ட பின் பாலியல் உறவு; திருமணம் நின்றுவிட்டால்..? - சட்ட ஆலோசனை

விகடன் டீம்

நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் ஒருவேளை திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவில் ஈடுபடும்போது, திருமணம் நின்றுபோகும் சூழலில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்

women
women

இன்றைய காலகட்டத்தில், நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர்கூட சில திருமணங்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள்.

இதுபோன்ற சூழல்களில் அதிக அளவு பாதிப்பை சந்திப்பது பெண் வீட்டினரே. அவர்கள், சட்டரீதியாக அணுகுவது குறித்து விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி. https://bit.ly/2z6beuW

கடந்த ஏப்ரல் மாதம் (CRIMINAL APPEAL NO. 629 OF 2019) உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, இங்கு குறிப்பிடப்படவேண்டியது. 'திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துவிட்டு மறுத்தால், அது என்ன பெரிய கொலைக்குற்றமா, அதற்குத் தண்டனை கிடைத்ததாக வரலாறு இல்லையே' என்று மெத்தனமாகத் தவறு செய்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தீர்ப்பு இது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் காதலியிடம் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி நம்பவைத்து, அவர் மறுத்தும் அவரை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி சம்மதிக்கவைத்துள்ளார். பின்னர், இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு, தனது வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். அந்தப் பெண், திருமணத்துக்கு வற்புறுத்தியபோதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் தட்டிக்கழித்துள்ளார். இறுதியாக அந்தப் பெண் தன் பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவிக்க, இவர்களின் காதலை ஏற்கெனவே அறிந்திருந்த பெற்றோர், திருமணம் தொடர்பாகப் பேச மருத்துவரின் வீட்டினரை அணுகினர்.

தன்னை ஏமாற்றிய ஆணுக்குத் தண்டனை பெற்றுத் தரத் துணியும் பெண்கள், இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும்போது, அது பாலியல் வன்புணர்வுக் குற்றமாகக் கையாளப்படுகிறது.

அப்போதுதான், மருத்துவர் வேறொரு பெண்ணை மணந்துள்ளது அவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்மீது அந்தப் பெண் புகார் அளித்தார். நீதிமன்ற விசாரணையில், மருத்துவருக்கு அபராதமும் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தீர்ப்பானது.

மருத்துவர், உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். அங்கும் அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். 'ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்துப் பாலியல் உறவில் ஈடுபட்ட பிறகு அவளைக் கைவிட்டது, பாலியல் வன்புணர்வுக் குற்றமாகும். இது வெறுக்கக்கூடிய குற்றம். இது ஒரு பெண்ணின் மரியாதையைக் களங்கப்படுத்துவதாகும். அதுமட்டுமல்ல, இது கொலைக் குற்றத்துக்கு ஈடானது' என்று தங்கள் கோபத்தைத் தீர்ப்பில் வெளிப்படுத்தினர் நீதிபதிகள். மருத்துவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த பத்து வருட சிறைத்தண்டனையை ஏழு வருடங்களாகக் குறைத்தது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 சட்டப்பிரிவின் கீழ் மருத்துவருக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

women
women

திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவு

நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் ஒருவேளை திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவில் ஈடுபடும்போது, திருமணம் நின்றுபோகும் சூழலில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். திருமணத்தை நிறுத்திய தங்கள் வீட்டினரிடம் இதுபற்றிச் சொல்ல முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை திருமணத்தை நிறுத்தியதில் மணமகனின் பங்கும் சம்மதமும் இருக்கும்பட்சத்தில், மணமகள் இதை வெளியே சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் அவன் தைரியமாகவே இருப்பான். ஆனாலும், தன்னை ஏமாற்றிய ஆணுக்குத் தண்டனை பெற்றுத் தரத் துணியும் பெண்கள், இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும்போது, அது பாலியல் வன்புணர்வுக் குற்றமாகக் கையாளப்படுகிறது.

மாறிவரும் கலாசார முறைகளால், நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு திருமணங்கள் நிறுத்தப்படும் குற்றங்களுக்கு தனிச்சட்டம் கொண்டுவரவேண்டியது காலத்தின் தேவை.

> இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்கறிஞர் வைதேகி பாலாஜி விரிவாக வழிகாட்டும் அவள் விகடன் தொடர் பகுதியை முழுமையாக வாசிக்க > சட்டம் பெண் கையில்!: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா? https://www.vikatan.com/news/judiciary/laws-favour-for-women-marriage-stopped-issue

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/