Published:Updated:

நெல்லை செவிலியர் பாலியல் வன்கொடுமை வழக்கு!- குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

வழக்கை விசாரித்த கல்லிடைக்குறிச்சி போலீஸார், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், வன்கொடுமை, கொடூரக் கொலை ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர், தமிழ்செல்வி. மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன், கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததால் தமிழ்செல்வி தனியாக வசித்து வந்தார். 

`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை

இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தமிழ்செல்வி, அவரது வீட்டு மாடியில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது வாயினுள் டவலை திணித்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை நடந்திருந்தது. வீட்டில் இருந்த 1,40,000 ரூபாய் மதிப்பிலான நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த கல்லிடைக்குறிச்சி போலீஸார், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், வன்கொடுமை, கொடூரக் கொலை ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அப்போது மகேந்திரன் என்ற ராஜேந்திரன், கார்த்திக், ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா, வசந்தகுமார் ஆகிய 4 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸார் கண்டுபிடித்தனர். 

நெல்லை நீதிமன்றம்
நெல்லை நீதிமன்றம்

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞரான பால்கனி வாதாடி சாட்சியங்களை நிரூபித்தார். குறிப்பாக, சம்பவ இடத்தில் கிடைத்த தரவுகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் கிடைத்த முடிவுகளை ஆதாரமாக வைத்து வாதாடினார்.

நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி இந்திராணி அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணா, வசந்தகுமார் ஆகியோரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

representational image
representational image

குற்றவாளிகளான இருவருக்கும் பாலியல் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்த பிரிவின் கீழ் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணாவுக்கு ஆயுள் தண்டனையும் வசந்தகுமாருக்கு 10 வருட தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு