Published:Updated:

`ஆடை மேல் தொடுவதும் பாலியல் குற்றம்தான்!' - சர்ச்சை தீர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

12 வயது சிறுமியின் மார்பை அழுத்தியதுடன் ஆடையையும் அவிழ்க்க முயன்ற 39 வயது நபரை, `போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது' என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பும், அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

`ஆடை மேல் தொடுவதும் பாலியல் குற்றம்தான்!' - சர்ச்சை தீர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்

12 வயது சிறுமியின் மார்பை அழுத்தியதுடன் ஆடையையும் அவிழ்க்க முயன்ற 39 வயது நபரை, `போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது' என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பும், அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி 12 வயது சிறுமிக்கு நேர்ந்த சிறார் வதை வழக்கில், சிறுமியின் மார்பை அழுத்தியதுடன் ஆடையையும் அவிழ்க்க முயன்ற 39 வயது நபரை, `போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது' என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பும் அதற்குக் கொடுத்த விளக்கமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த தீர்ப்புக்கு இடைக் கால தடை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் முறையீட்டில் நேற்று, நாக்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

கடந்த 2016-ம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 39 வயதான சதீஷ் என்பவர், 12 வயதுச் சிறுமியை வீட்டிற்கு அழைத்து, கொய்யாப் பழம் வழங்குவதாகக் கூறி, அவரை சிறார் வதைக்கு உட்படுத்தியிருக்கிறார். அப்போது கதறி அழுது ஓடிய சிறுமியைப் பெற்றோர் மீட்டனர். அவர் மேல் வழக்குப் பதியப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் சதீஷ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு சர்ச்சையானது. தீர்ப்பில், ``தோலுடன் தோல் தொடர்பு இருந்தால் மட்டுமே பாலியல் சீண்டலாகக் கருத முடியும், ஆடையின் மேல் தொடுவது பாலியல் குற்றம் ஆகாது" என விளக்கம் அளிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களின் பாதுகாப்பு மோசமாக இருக்கும் சமூகத்தில் இந்த தீர்ப்பு, வருங்காலத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்கள் காவல் நிலையத்திலோ நீதிமன்றத்திலோ புகார் அளிப்பதே மிகக் குறைவாக இருக்கும் சமூகத்தில், இந்த தீர்ப்புக்குப் பின் எப்படி பெண்கள் நீதிமன்றத்தை நம்பி புகார் அளிப்பார்கள் எனக் கேள்விகள் எழுந்தன. அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா கனெடிவாலாவுக்கு ஆணுறைகளை அனுப்பி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நீதிபதி புஷ்பா பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனப் பலர் குரலெழுப்பினர்.

Sexual Harassment  (Representational Image)
Sexual Harassment (Representational Image)

தற்போது அந்த சர்ச்சை தீர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள உச்ச நீதிமன்றம், ``பாலியல் குற்றங்களுக்குக் காரணமாக இருப்பது உடல் ரீதியான தொடுதல் அல்ல, பாலியல் நோக்கமே. குற்றவாளியைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைப்பது சட்டத்தின் நோக்கம் இல்லை. எனவே, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம்" எனக் கூறியிருக்கிறது.