Published:Updated:

`சிறுமியிடம் தொடர்ந்து அத்துமீறினார்!' - கோத்தகிரி இளைஞரைத் தண்டித்த நீதிமன்றம்

ஊட்டி நீதிமன்ற வளாகம்
ஊட்டி நீதிமன்ற வளாகம்

`தாயுடன் நெருக்கமாக இருந்த ஜெயக்குமார், பின் அவரது மகளுடன் பழக ஆரம்பித்துள்ளார். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.'

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு கைத்தளா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான ஜெயக்குமார். இதேபகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைச் சாதகமாக்கிக்கொண்டு அந்தப் பெண்ணின் 16 வயது மகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

தாயுடன் நெருக்கமாக இருந்த ஜெயக்குமார், பின் அவரது மகளுடன் பழக ஆரம்பித்துள்ளார். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய், கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்புத் துறை சார்பிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் சிறுமி உயிரிழந்தது ஏன்?- எஃப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்

இதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

ஊட்டி நீதிமன்ற வளாகம்
ஊட்டி நீதிமன்ற வளாகம்

வழக்கு விசாரணையை மேற்கொண்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளியான ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு