Published:Updated:

`வீடியோ காலில் வாதாடிய வக்கீல்கள்; 18 பேருக்கு ஜாமீன்!' - ஊரடங்கில் அசத்திய ஊட்டி நீதிமன்றம்

Ooty Court
Ooty Court

நாள்தோறும் இதேபோன்று வீடியோ கால் மூலம் வழக்குகளை முடிக்க ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக, நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், முதல் முறையாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸிங் (வீடியோ கால் மூலம்) மூலம் 23 வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 18 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ooty court complex
ooty court complex

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த மாதம் 25-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள், குறைந்த அளவிலான ஊழியர்களைக்கொண்டு இயங்கிவந்தன. வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றங்களுக்கு வராத நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக வழக்குகள் ஏதும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

Ooty Court
Ooty Court

இந்த நிலையில், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று, முதல்முறையாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் (செல்போன் வீடியோ கால் மூலம்) வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விஜயன், செந்தில், பாலாஜி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் வாதாடினர். இதில், 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கேட்டு மனு அளித்தனர். இதை விசாரித்த நீதிபதி வடமலை, 18 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நேற்று ஜாமீன் அளித்தார்.

Advocate Vijayan
Advocate Vijayan

மீதமுள்ள 5 வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து, நாள்தோறும் இதேபோன்ற வீடியோ கால் மூலம் வழக்குகளை முடிக்க ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக, நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு