Published:Updated:

'நெருக்கடிநிலை'யில் நீதிமன்றங்கள்! - கே.சந்துரு எழுப்பும் சந்தேகம்

விகடன் டீம்

சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் முதுநிலைப் பட்டியலில் நான்காவது நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டு அவரின் சீனியர்களான மூன்று நீதிபதிகள் ஓரங்கட்டப்பட்டனர்.

judge
judge

இன்று உயர்மட்ட நீதிமன்றங்கள் எந்தளவுக்கு சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியே. காஷ்மீரில் இருக்கும் தன் தாயைச் சந்திப்பதற்கு மகள் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுச் செல்வது கேலிக்கூத்து. அதைவிட அபத்தம் மகள் தனது சொந்த மாநிலத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது 'ஸ்ரீநகர் மிகவும் குளிராக இருப்பதால் போக வேண்டாம்' என்று தாயுள்ளத்துடன் தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2kH7D2D

இது எப்படியிருக்கிறது என்றால், 1975-ல் நெருக்கடி நிலைமையின்போது ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி மிசா சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி, 'அரசை குறை கூற வேண்டாம். சிறைக்கைதிகள் தாயின் பரிவுடன் பார்த்துக்கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார். தற்போது மீண்டும் ஒரு நெருக்கடிநிலை உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதை கேள்வி கேட்கும் நீதிமன்றங்கள் தங்களது அரசியல் சட்ட கடமையைச் செய்ய மறுக்கிறார்களோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.

பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து மட்டும் பதவி உயர்வு செய்யப்பட்ட ஐந்து நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள்

என்றைக்குமே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் எந்த வரையறைக்கும் உட்பட்டு நடந்ததில்லை. அகில இந்திய நீதிபதிகள் முதுநிலைப் பட்டியல் மற்றும் மாநிலப் பிரதிநிதித்துவமும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. இன்றைக்கு பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கு அங்கு பிரதிநிதித்துவம் இல்லாதபோது பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து மட்டும் பதவி உயர்வு செய்யப்பட்ட ஐந்து நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள். பலமுறை மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் முதுநிலைப் பட்டியலில் நான்காவது நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டு அவரின் சீனியர்களான மூன்று நீதிபதிகள் ஓரங்கட்டப்பட்டனர். அதைவிட கேலிக்கூத்து, அவரது நியமனத்தால் ஓரங்கட்டப்பட்ட நீதிபதி ரவீந்திரபட் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நியமிக்கப்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட நியமனங்களைச் செய்ய கொலிஜியம் தவிர்த்த ஒரு நியமன அமைப்பை உருவாக்க வேண்டும். மாறாக, அரசு அதிகாரிகள் நியமனம்போல் முதுநிலைப் பட்டியலின்படி நியமனம் செய்யப் பட்டால் உச்ச நீதிமன்றத்தின் உண்மையான நோக்கமே தோற்கடிக்கப்படும்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம் என்பது, நீதிபதிகளின் பதவி உயர்வுக்கானது அல்ல. அது, குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் அமைப் பாக விளங்க வேண்டும். அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசித்து ஒரு புதிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்கினால் மட்டுமே சச்சரவுகள் நீங்கும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

- இது, கே.சந்துரு - மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் - ஜூனியர் விகடன் இதழில் எழுதிய சிறப்புக் கட்டுரையின் சில பகுதி.

நீதிபதிகள் நியமன சர்ச்சைகளின் பின்னணி என்ன? நியமனம் எப்படி நடக்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதே ஒரே வழி!

https://www.vikatan.com/news/general-news/a-council-should-be-established-to-appoint-judges

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/