Published:Updated:

`தாலியைக் கழற்றுவது கணவருக்குச் செய்யும் உளவியல் கொடுமை!’ - விவாகரத்து வழங்கிய உயர் நீதிமன்றம்

திருமணம்

``பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி என்பது அவர்கள் திருமண வாழ்வின் தொடர்ச்சியைக் குறிக்கும் ஓர் அடையாளம். கணவனின் இறப்புக்குப் பிறகே அகற்றப்பட வேண்டும். தாலியை அகற்றுவது கணவனுக்குச் செய்யும் மிகப்பெரிய உளவியல் கொடுமையாகும்.’’ - தீர்ப்பில் உயர் நீதிமன்றம்

`தாலியைக் கழற்றுவது கணவருக்குச் செய்யும் உளவியல் கொடுமை!’ - விவாகரத்து வழங்கிய உயர் நீதிமன்றம்

``பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி என்பது அவர்கள் திருமண வாழ்வின் தொடர்ச்சியைக் குறிக்கும் ஓர் அடையாளம். கணவனின் இறப்புக்குப் பிறகே அகற்றப்பட வேண்டும். தாலியை அகற்றுவது கணவனுக்குச் செய்யும் மிகப்பெரிய உளவியல் கொடுமையாகும்.’’ - தீர்ப்பில் உயர் நீதிமன்றம்

Published:Updated:
திருமணம்

ஒரு மனைவி தாலியைக் கழற்றி வைப்பது கணவருக்குச் செய்யும் உளவியல் கொடுமை என்று சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியரான சிவகுமார் என்பவர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை நீதிபதிகள் வி.எஸ்.வேலுமணி மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில், இருவரும் பிரிந்திருந்த காலகட்டத்தில் மனைவி கணவர் கட்டிய தாலியைக் கழற்றி வைத்திருந்தது தெரியவந்தது.

Divorce
Divorce

ஆனால், தான் தாலிக் கயிற்றை மட்டுமே அகற்றியதாகவும், திருமாங்கல்யம் இன்னும் தன்னிடமே இருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பெண்ணின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் வாதாடுகையில், இந்து திருமண சட்டத்தின் பிரிவு 7-ன் படி, ஒரு பெண் தாலியை அணிந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், ஒருவேளை தாலியை அகற்றியது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அது திருமண பந்தத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் சட்டத்தை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ``தாலியைக் கழற்றி வங்கி லாக்கரில் வைத்துள்ளதை அந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார். கணவன் உயிருடன் இருக்கும் வரை எந்த ஓர் இந்துப் பெண்னும் தாலியை அகற்ற மாட்டார். பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி என்பது அவர்கள் திருமண வாழ்வின் தொடர்ச்சியைக் குறிக்கும் ஓர் அடையாளம். கணவனின் இறப்புக்குப் பிறகே அகற்றப்பட வேண்டும். தாலியை அகற்றுவது கணவனுக்குச் செய்யும் மிகப்பெரிய உளவியல் கொடுமையாகும்.

தாலி
தாலி

இது கணவனுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துவதோடு அவருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருக்கும்" என்றும் தீர்ப்பில் தெரிவித்தனர். மேலும் பேசிய நீதிபதிகள், ``ஏதோ ஒரு தருணத்தில் தாலியைக் கழற்றி வைப்பது திருமண உறவை பாதிக்கும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், மனுதாரரின் மனைவியின் இந்தச் செயலை செய்தது ஒரே நோக்கத்துக்காக மட்டுமே. இந்தத் திருமண உறவு இருவருக்கும் ஒத்துவரவில்லை என்பதற்கும் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழவே முடியாது என்பதற்கும் பல ஆதரங்கள் உள்ளன.

மனுதாரரின் மனைவி, அவர் கணவரின் மாணவர்கள், உடன் பணிபுரிவோர் மற்றும் காவல் துறையினர் எனப் பல பேரின் முன்னிலையில் தன் கணவனுக்கு அவர் பணி செய்யும் இடத்தில் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பல உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த நீதிமன்றம், அந்தப் பெண் தன் கணவனுக்கு உளவியல் கொடுமை புரிந்துள்ளதாகவும், அவருக்குத் திருமணம் தாண்டிய தகாத உறவு இருப்பதாக அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் கூறுவதில் தங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை" என்று தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், ``மனுதாரரும் அவரின் மனைவியும் 2011-ம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்வதாகவும், அந்தக் காலகட்டத்தில் இருவரும் மீண்டும் இணைவதற்கு மனைவியின் தரப்பில் இருந்து எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மனுதாரருக்கு அவரின் மனைவி ஏற்படுத்திய உளவியல் கொடுமைகளையும் கணக்கில்கொண்டு விவாகரத்து அளிக்கப்படுகிறது’’ என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.