Published:Updated:

`காந்தி கொலைக்கு RSSதான் காரணம்!' பேசிய ராகுல்; ரூ.1500 அபராதம் கட்டிய RSS தொண்டர்! பின்னணி இதுதான்

ராகுல் காந்தி - காங்கிரஸ்

`மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்!' என்று பேசியதாகக்கூறி ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ராஜேஷ் குந்தே ராகுல் காந்திமீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

`காந்தி கொலைக்கு RSSதான் காரணம்!' பேசிய ராகுல்; ரூ.1500 அபராதம் கட்டிய RSS தொண்டர்! பின்னணி இதுதான்

`மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்!' என்று பேசியதாகக்கூறி ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ராஜேஷ் குந்தே ராகுல் காந்திமீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Published:Updated:
ராகுல் காந்தி - காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் `மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்!' என்று பேசியதாகக்கூறி ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ராஜேஷ் குந்தே ராகுல் காந்திமீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருக்கிறார். ஆனால் வழக்கைத் தாக்கல் செய்த ராஜேஷ் குந்தே கடந்த மார்ச் மாதம் இவ்வழக்கு பீவாண்டியில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீதிபதி வி.பாலிவால் விசாரணையைத் தள்ளி வைத்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏப்ரல் மாதம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மீண்டும் இவ்வழக்கு விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று ராஜேஷ் கேட்டுக்கொண்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி பாலிவால் மனுதாரருக்கு மார்ச் மாதத்திற்கு ரூ.500, ஏப்ரல் மாதத்திற்கு ரூ.1000 என மொத்தம் ரூ.1500 அபராதம் விதித்தார். இப்பணத்தை ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை ராகுல் காந்தியின் வழக்கறிஞர் நாராயணன் உறுதிபடுத்தினார். இது குறித்து நாராயணன் கூறுகையில்," கோர்ட் உத்தரவுப்படி ராஜேஷ் 1500 ரூபாயை மணியாடர் மூலம் ராகுல் காந்திக்கு அனுப்பிவிட்டார். டெல்லியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்தில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதனை மனுதாரர் ராஜேஷ் வழக்கறிஞர் கணேஷ் உறுதிபடுத்தினார். கோர்ட் உத்தரவுப்படி 1500 ரூபாயை மனுதாரர் அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். இவ்வழக்கில் 2018-ம் ஆண்டு ராகுல் காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism